Thursday, March 25, 2010

குழந்தைகளை கொஞ்சம் பழக விடுங்கள்

சமீபத்தில் என் நெருங்கிய நண்பரோடு, நண்பரின் குடும்ப விழாவிற்கு அவரது உறவினர்கள் வீட்டிற்கு அழைப்பிதழ் கொடுக்க நானும் சென்றேன். உறவினர் வீட்டின் அழைப்பு மணியை அழுத்தினோம். கதவை திறந்தவுடன் வீட்டில் உள்ள பெரியவர் எங்களை வரவேற்க வீட்டின் மற்றொரு பெண் ஒருவர் மூன்று குழந்தைகளை ஒரு அறைக்கு செல்ல ஆணை பிறப்பித்தார்.....அந்த குழந்தைகள் விருப்பம் இல்லாமல் செல்வதை பார்க்க முடிந்தது. இந்த காலத்தில் குழந்தைகளை மற்றவர்களிடம் பழக விடுவதில்லை, உறவினர்கள் எவரையும் அறிமுகம் படுத்துவதில்லை......ஏன் இந்த நிலை ..... ஏன் அந்த குழந்தைகளை மற்றொரு அறைக்கு போக சொல்ல வேண்டும்.


வீட்டின் பெரியவர்கள் தான் குழந்தைகளை மற்றவர்களோடு பழக வாய்ப்பு அளிக்க வேண்டும். வீட்டின் அருகில் உள்ளவர்கள், பள்ளி/கல்லூரி நண்பர்கள் , உடன் பணிபுரியும் நபர்கள் ஆகியோர்களை சகோதர /சகோதிரிகளாக நினைக்கும் படி உறவின் சுகங்களை உணர வைக்க வேண்டும். ஆனால் இப்போது பத்தாம் வகுப்பு மாணவி உடன் படிக்கும் மாணவனை காதலித்து தோல்வி பயத்தால் தற்கொலை ......... சகோதரனாக பார்க்க வாய்ப்பை உருவாக்கி கொடுக்கவில்லை இந்த சமுதாயம் ....... வீட்டில் ஒரே குழந்தை மட்டும் இருப்பதால் ......... இந்த சகோதரத்துவம் இல்லாமலே சுயமாக வாழ பழகி விட்டனர். நிலைமை இப்படி இருக்க குழந்தைகளுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டிய நாம் ............ சொத்துக்காக, பணத்துக்காக சண்டைபோட்டுநீதிமன்றத்துக்கு சென்று கடைசியில் (சகோதரன்) சகஉதிரத்தைக் கூட கொல்லக் கூடதயங்குவதில்லை.

குழந்தைகளை மற்றவர்களோடு பழக விடாமல் இருக்கும் நிலைமை தொடர்ந்தால்........மற்றவர்களோடு பழகாமல் எதாவது செயலுக்கும் மற்றவர்களை நாடும் பொழுது .... உதவி கேட்கக்கூட .தயக்கம் தயக்கம் தயக்கம்....இந்த தயக்கம் எந்தவிதமுன்னேற்றத்துக்கு வழிவகுக்காமல்......எந்த ஒரு சிறு செயலுக்கு நம் வீட்டுபெரியவர்களை ...... நாட வேண்டியுள்ளது.........ஆகவே தயவு செய்து குழந்தைகளை மற்றர்வர்களிடம் விளையாட அனுமதித்து பழக வாய்ப்பு கொடுங்கள்.

3 comments:

பனித்துளி சங்கர் said...

//////வீட்டின் பெரியவர்கள் தான் குழந்தைகளை மற்றவர்களோடு பழக வாய்ப்பு அளிக்க வேண்டும். வீட்டின் அருகில் உள்ளவர்கள், பள்ளி/கல்லூரி நண்பர்கள் , உடன் பணிபுரியும் நபர்கள் ஆகியோர்களை சகோதர /சகோதிரிகளாக நினைக்கும் படி உறவின் சுகங்களை உணர வைக்க வேண்டும்///////


சிந்தித்து செயல்படுத்த பட வேண்டிய ஒன்றுதான்!
பகிர்விற்கு நன்றி!!

பனித்துளி சங்கர் said...

நண்பருக்கு வணக்கம் !
உங்களின் புதிய பதிவு எப்பொழுது ? ?????
மீண்டும் வருவேன்

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

LinkWithin

Related Posts with Thumbnails