Wednesday, December 17, 2008

பேசாமலும் பழகலாம் வாங்க


இன்றைய இயந்திரமயமான வாழ்க்கையில் சகோதரனிடம் (சக உதிரம் = சக இரத்தம்) கூட உறவை வளர்க்கக் கடினமாக இருக்கிறது. இன்றைய சூழ்நிலை இப்படி இருக்க நாம் எப்படி நமக்கு தெரியாதவர்களிடம் கூட உறவை வளர்க்க முடியும்.....முடியுமா?

ஐரோப்பாவில் சில ஆண்டுகளுக்கு முன்னால் இந்தியாவை போன்றே இன வேறுபாடுகள் இருந்தது. உயர் இனத்தினர் அரசாங்கத்தின் பல உயர் பதவிகளில் இருந்தனர். இந்த நிலையில் ஒரு கீழ் இனத்தை சார்ந்த ஒரு விவசாயி தினமும் தனக்கு சொந்தமான விளை நிலத்தில் வேலை செய்து கொண்டு வந்தான். ஒரு நாள் ராணுவ உயர் அதிகாரி ஒருவர் தன்னுடைய நிலத்தில் நடத்து செல்வதை கண்டான். மரியாதை நிமிர்த்தமாக கைகளை கூப்பி "Good Morning" என்று சொல்ல அந்த அதிகாரி எந்த விதமான செயலையும் விவசாயிடம் சொல்லவும் இல்லை செய்யவும் இல்லை. இப்படியாக தினமும் அதிகாரி அந்த வழியாக செல்ல விவசாயி தினமும் "Good Morning" என்று சொல்ல அந்த அதிகாரி நடந்து மட்டும் சென்று விடுவார். இப்படியாக பல வருடங்கள் சென்றது, இருந்தாலும் விவசாயி தன் செயலை விடவில்லை. அதிகாரி எதையும் கண்டுகொள்ளவில்லை. ஒரு நாள் இன கலவரம் உருவாகி கீழ் இன மக்களை கொன்று குவித்தனர். தண்டனை எப்படி என்றால் தலையை மேசை மீது வைக்க வேண்டும் அப்போது மேலிருந்து ஒரு கத்தி வந்து தலையை துண்டாக வெட்டிவிடும். இந்த தண்டனை நம் கதையில் வரும் அதிகாரி முன்னிலையில் நடந்தது. இந்த விவசாயின் தண்டனை நிறைவேற்றும் போது அதிகாரியை பார்க்க நேர்ந்தது அப்போது மீண்டும் "Good Morning" என்று சொன்னார். அந்த உயர் அதிகாரி விவசாயியைத் தன் பக்கம் அழைத்து கொண்டார். அந்த விவசாயி மரணம் அடையாமல் பாதுகாக்கப்பட்டார்.

இது போல் நாம் அனைவரும் மற்றவர் எப்படியோ நாம் நம் அன்பை மற்றவர்களிடம் காட்டினால் பல இடங்களில் (வீடு, அலுவலகம்) நிறைய துன்பங்களிருந்து விடுபட்டு இன்பமாக வாழ ஒரு வழி.

நான் கல்லூரியில் படித்து கொண்டிருக்கும் போது அந்த கல்லூரி நிர்வாகத்தின் கீழ் உள்ள தொழிற்சாலை தொழிலாளர்களும் நிர்வாகத்தினரும் கண்டு பேசும் தினமாக (பொங்கல் தினத்தன்று) விழா கொண்டாப்பட்டது. அப்போது அங்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு இருந்த அந்த நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும் கல்லூரியின் முதல்வர் கண்டு பேசும் தினத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாகச் சொன்ன இந்தக் கதை என்னை மிகவும் சிந்திக்க வைத்தது.

இந்த கதையைச் சொன்னவர், எந்த வேலை ஆனாலும் அதை எப்படி முறையாகச் செய்வது என்று எனக்கு சொல்லி கொடுத்த ஆசான் எங்கள் கல்லூரி முதல்வர்...
திரு.D.பாலசுப்பிரமணியம் B.E., M.S., முதல்வர்,
அரசன் கணேசன் தொழில் நுட்பக் கல்லூரி, சிவகாசி.

Tuesday, December 16, 2008

உங்கள் கடவுள் நம்பிக்கை உண்மையா? இங்கே சோதனை பண்ணுங்கள்


ஒரு கடவுள் நம்பிக்கை இல்லாத ஆண்மகன் மலைப் பாங்கானப் பகுதியில் நடத்து சென்று கொண்டு இருந்தான். ஒரு மரத்தின் வேர் அவனது காலில் பட்டு மலையின் கீழே விழ நேர்ந்தது. கீழே உருலும் போது மனதில் சிறியப் பயம் உருவாகியது. அவன் நினைத்தான் கடவுள் என்று ஒருவர் இருந்தால் என்னைக் காப்பாற்றட்டும் என்று. அவன் நினைத்தவுடன் ஒரு மரக் கிளைத் தடுத்து அவன் தொங்கிகொண்டிருந்தான். அப்போது அவன் மனம் நினைத்தது நாம் கடவுளை அரைகுறையாக நம்பினோம் அரைகுறையாக காப்பாத்தப்பட்டோம் முழுமையாக நம்பினால் முழுவதுமாக காப்பாத்தப்படுவோம் என்று நினைக்க ........ மேலிருந்து ஒரு சப்தம் கேட்டது மகனே இப்போதவது நீ நம்புகிறாயா? .... சரி நீ என்னை (கடவுள்) அரைகுறையாக நம்பினாய் அரைகுறையாக காப்பாத்தப்பட்டாய் நீ என்னை முழுவதுமாக நம்பினாய் என்பதற்கு மரக் கிளையிலிருந்து கையை எடு நான் உன்னை மீண்டும் காப்பாத்துகின்றேன் என்றது.

நம்மில் எதனைப் பேர் கையை விடுவோம்...

உங்கள் மனதில் எந்த எண்ணம் முதலில் தோன்றியதோ (கையை எடுப்பது அல்லது எடுக்காமல் இருப்பது) அதுவே நீங்கள் கடவுள் மீது கொண்டுள்ள நம்பிக்கை.

என் வாழ்க்கையில் நிறையக் கருத்துகளில் என்னைக் கவர்ந்தது மட்டும் இல்லாமல் சிந்திக்க வைத்த திரு.சுகி.சிவம் அவர் அண்ணாமலையார் அற்புதங்கள் என்ற ஒலி நாடாவில் சொல்லிய நான் ரசித்த இந்தக் கதை என்னை மிகவும் சிந்திக்க வைத்தது.

நன்றி:
திரு.சுகி. சிவம்
தமிழகத்தின் மிகச் சிறந்த எழுத்தாளர் ற்றும் சமய சொற்பொழிவாளர்

"""என்னுடைய வலைப்பூவில் திரு. சுகி.சிவம் அவர்கள் சொன்னக் கதையைப் பயன்படுத்தியதைப் பார்த்த அவர்கள்(திரு. சுகி.சிவம்) எனது வலைப்பூவைச் சுட்டிக்காட்டியது மட்டும் அல்லாமல் படித்து 17.12.2008 அன்று எனக்கு வாழ்த்து மின்னஞ்சல் அனுப்பி இருந்தார்.......நன்றி அய்யா"""





Monday, December 15, 2008

தாய் தந்தையினரின் பெருமை


இன்றையப் பர பரப்பான உலகத்தில் குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் இடையே உள்ள உறவு மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. ஒரு காலத்தில் பெற்றோரை கவனிக்க முடியாமல் முதியோர் நிலையத்தில் சேர்த்தவர்கள் இப்போது அதுவும் முடியாமல் எங்காவது தொலைத்து விடுகின்றனர். நான் கடந்த வியாழக்கிழமை கார்த்திகை தீபத்தன்று திருவண்ணாமலை கிரி வலத்தில் குபேர லிங்கம் கோவிலுக்குள் செல்லும் போது ஒரு அதிர்ச்சியான விளம்பர பலகையை பார்த்தேன். அதில் முதியோரை கவனிக்க நிதி வழங்ககோரி இருந்தார்கள். அந்தப் பலகையில் குழந்தைகளால் தொலைக்கபட்டப் பல முதியோரைப் புகைப்படம் பிடித்து போட்டு இருந்தனர். தன்னை ஈன்று எடுத்த பெற்றோரை பாதுகாக்காதவனை எந்த கடவுளாலும் பாதுகாக்க முடியாது.



இதற்கு ஒரு கதை: இந்தக் கதை மகாபாரதத்தில் உள்ள ஒரு கிளைக் கதை

இந்தியாவின் வடக்கே ஒரு ஊரில் ஒருவனுடைய தாய் தந்தை ஆகிய இருவருக்கும் கண்கள் தெரியாது. அவனுடைய பெயர் ராமன். ராமன் சிறு வயதில் இருந்து தன் பெற்றோர்க்கு தேவையான (உணவு,உடை) போன்ற அனைத்தையும் பூர்த்தி செய்த்து அவர்களது மனம் நோகாமல் நடத்து வந்தான். அது மட்டும் அல்லாமல் அவன் வசித்து வந்த வீடு புண்ணிய நதியான கங்கைக்கு அருகில் உள்ளது. நாள் தோறும் கங்கையில் நீராடப் பல ஞானிகள், ரிஷிகள் நடத்து யாத்திரை செல்வதுண்டு. இவன் யாத்திரை வருபவர்களுக்கு தங்க இடமும் உண்ண உணவும் கொடுத்து வந்தான்.

ஒரு நாள் யாத்திரையாக வந்த மூன்று ரிஷிகள் ராமன் வீட்டில் தங்கி ஓய்வு எடுத்து வந்தனர். அவர்களுக்கு உணவு தயார் செய்து சாப்பிட அழைத்தான். சாப்பிட வந்தவர்கள் ராமா நீ பலத் தடவை கங்கையில் நீராடி இருக்கிறாயா என்று கேட்டனர். அதற்கு ராமன் நான் எனது பெற்றோர்களுக்கு தேவையானப் பல வேலைகளை முடிக்கவே நேரம் சரியாக இருக்கிறது ஆகையால் நான் இது வரைக்கும் கங்கையைப் பார்த்தது கூட இல்லை என்றான். மிகவும் கோபம் கொண்ட ரிஷிகள் உலகத்தின் பலப் பகுதிகளில் இருந்து கங்கையைப் பார்க்க வருகின்றனர் நீ கங்கை அருகில் இருத்தும் செல்லவில்லை என்றால் நீ எவ்வளவு பாவம் செய்தவனாக இருக்க வேண்டும் உன் வீட்டில் சாப்பிடுவது பாவம் என்று ராமன் வீட்டில் சாப்பிடாமல் யாத்திரை சென்றுவிட்டனர். ராமனுக்கு மிகவும் வருத்தம். கங்கையின் பாதையைத் தேடிப்போன ரிஷிகள் சென்று கொண்டே இருந்தனர் கங்கையை காணவில்லை. மிகவும் வருத்தத்துடன் வந்து கொண்டிருத்த ரிஷிகள் கங்கை ராமன் வீட்டின் வெளியேப் பாய்வதை கண்டனர். என்ன அதிசயம் என்று பார்க்க ஒரு சப்தம் மட்டும் கேட்டது எவன் ஒருவன் தாய் தந்தையருக்கு தேவையானவற்றை கொடுத்து மனம் நோகாமல் வைத்திருக்கனோ அவன் தினம் தினம் கங்கையில் குளித்தற்கு சமம். ஆக தினம் தினம் பாவத்தை கழுவி புனியத்தை அடைந்தவன். ஆகையால் இந்த உலகத்தில் தாய் தந்தையருக்கு நிகரான கடவுள் உலகில் இல்லை. தாய் தந்தையாரை கவனிக்காமல் எந்த கோவிலுக்கு சென்று பரிகாரம் செய்தாலும் என்ன தானம் செய்தாலும் புண்ணியம் கிடைக்காது.

சிவகாசி மாரியம்மன் கோவிலில் வைத்து நடந்த சொற்பொழிவில் நான் கேட்ட இந்தக் கதை என்னை மிகவும் சிந்திக்க வைத்தது.

சொற்பொழிவாளர்:
திருமதி. இளம்பிறை மணிமாறன், சமய சொற்பொழிவாளர்.
தூத்துகுடிஇல் உள்ள ஒரு பெண்கள் கலைக் கல்லூரிஇன் முதல்வர்,




LinkWithin

Related Posts with Thumbnails