Thursday, July 15, 2010

குழந்தைகளுக்கு தேவையான பாடம்

சென்ற ஞாயிறுக்கிழமை தினமலர் நாளிதழில் வெளிவரும் வாரமலர் இதழில் வெளிவந்த ஒரு பகுதி மிகவும் என்னை கவர்ந்தது ....... அதை உங்களோடு பகிர்ந்து கொள்கின்றேன்.

குற்றாலத்தில், ஒரு வயதான தம்பதியர் ஷாப்பிங் பண்ணிக் கொண்டிருந்தனர். அப்போது அந்தப் பெண்மணி, குழந்தை அதைக் கேட்டது, இதைக் கேட்டது என்று கூறி, நிறைய விளையாட்டுப் பொருட்களை வாங்கச் சொல்லி, நச்சரித்துக் கொண்டே இருந்தார். கணவர் அதைப் பொருட்படுத் தாமல், ஒரு சிலவற்றை மட்டுமே வாங்கினார். "என்னவோ நம்ம கிட்டப் பணமே இல்லாதது மாதிரி பிசுநாறித் தனம் பண்றீங்களே... குழந்தை ஆசைப் பட் டதை எல்லாம் வாங்கித் தரலாம் இல்ல? அதை ஏன் ஏமாற்றம் அடையச் செய்றீங்க?' என்று கேட்டு, கணவனைக் கோபித்தார். அவரோ அதைச் சட்டையே பண்ணாமல், கிளம்பி விட்டார். பெண்மணி சண்டை போடவே துவங்கி விட்டார். கணவரோ, சிரித்துக் கொண்டே, "வயசான அனுபவம் கொஞ்சம் கூட உனக்கு இல்லையே... இந்தச் சின்ன வயசிலேயே, அதோட மனசுல கேட்டதெல்லாம் கிடைக்கும்; நினைச்ச தெல்லாம் நடக்கும்கிற எண்ணத்தை வளர விடக்கூடாது. ஏமாற்றமும் கிடைக்கும்; சகிச்சுக் கிட்டுதான் ஆகணும்கிற மனப்பான்மையை உருவாக்கணும். அப்பதான் எதிர்காலத்திலே ஏமாற்றங்கள் ஏற்படுறப்ப அதுகளாலே சகிச்சுக் கவும், சமாளிக்கவும் முடியும். அதுக்காகத்தான் இப்பவே பயிற்சி தர்றேன்...' என்றார். புரிந்து கொண்ட பெண்மணி தலையை ஆட்டி னார். தேவையான பாடமல்லவா இது!

ரூபாய் 1000 பரிசு பெற்ற - இது உங்கள் பக்கம் - என்ற பகுதியில்
— ஆ.கல்யாணி, தோவாளை,

நன்றி: தினமலர்

Monday, July 12, 2010

தமிழகத்தில் நடக்கும் கொடுமை - தூக்கு மேடையாகும் கல்லூரிகள்

இன்று கல்வி என்பது சேவை நோக்கம் இல்லாமல் வியாபாரமாக மாறிவிட்டது. நிறைய கல்வி நிறுவனங்கள் தங்கள் கல்லூரிகளில் சேர சொல்லி தொலைக்காட்சி/வானொலி/நாளிதழ் ஆகியவற்றில் விளம்பரங்கள் செய்கின்றனர். பெற்றோரும் மாணவர்களும் அந்த விளம்பரங்களை பார்த்து கல்லூரியின் தரங்களை மதிப்பிடாமல் விளம்பரங்களை பார்த்து சேர்த்து விடுகின்றனர். ஆனால் பல்வேறு கனவுகளுடன் வந்த மாணவர்கள் ....... கல்வி நிறுவனங்கள் கொடுக்கும் இன்னல்களால் தற்கொலை/தூக்கு ஆகிய முடிவுகளுக்கு வருகின்றனர். ஆனால் பெற்றோர்களோ பையன் பட்டதாரியாக வருவான் என்ற கனவில் சொந்த நிலங்களை விற்று/கடன் வாங்கி படிப்பு தொகை/நன்கொடை ஆகியவற்றை கட்டிக்கொண்டு இருப்பர் .......... ஆனால் பையனோ வந்தது ............

மாணவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் :

கல்வி நிறுவனங்கள் மாணவர்கள் மீது திணிக்கும் பிரச்சனைகள்:

1. இந்தியா/தமிழகம் ஆகியவற்றில் தலைசிறந்த கல்லூரியாக வர வேண்டும் என்ற நோக்கில் மாணவர்களின் பட்டிப்பு நேரத்தை அதிகரித்து மன உளைச்சலை ஏற்படுத்துதல்.

2. சரியாக படிக்காத மாணவர்களுக்கு தண்டனை வழங்குதல்.

3. மாணவர்கள் செய்யும் சிறு சிறு தவறுக்களுக்கு சட்டத்திட்டம் என்று சொல்லி மாணவர்களை வகுப்பு அறைக்கு வெளியில் நிற்க சொல்லுதல் போன்ற பல்வேறு தண்டனைக்களுக்கு உட்படுதுத்தல்.

கல்வி நிறுவனங்களின் நோக்கம் எப்படி இருக்க வேண்டும்?

1. கல்வி நிறுவனங்கள் செயல் மீது கவனம் இல்லாமல் செயலின் விளைவு மீது கவனம் செல்லுத்துதல் அதாவது நல்ல கல்வியை வழங்கவேண்டிய நிர்வாகம் அதன் மூலம் வரும் நன்கொடை /லாபம்/புகழ் ஆகியவற்றிலே கவனம் செலுத்துகின்றனர்.

2. நல்லா படிக்கின்ற மாணவர்களை எல்லாம் சேர்த்துக்கொண்டு சிறந்த கல்லூரி/பள்ளி என்று பெருமைப்பட்டுக்கொள்கின்றனர்

இதை தவிர்க்க ....

1. விவசாயி இன்னும் செயல் மீது கவனம் செல்லுத்துவதால் (காதல்/பற்று) தான் இன்னமும் அரிசி, மாம்பழம், கத்தரிக்காய் ....ஆகியவற்றை பயிர் செய்துகொண்டு இருக்கின்றான்....செயலின் விளைவு மீது கவனம் செலுத்தி இருந்தால் (பணம்) என்றோ கஞ்சா/அபின் போட்டு சம்பாதித்து இருப்பான். விவசாயி தன் தொழில் மீது காதல் கொண்டது போல் கல்வி நிறுவனங்கள் அவர்களது செயல் மீது கவனம் செலுத்த வேண்டும்.

2 . நல்லா படிக்கின்றவர்களை எல்லாம் என்னிடம் (கல்லூரி/பள்ளி) கொடுங்கள் நான் 100% தேர்ச்சி தருகின்றேன் என்றால் அது கல்லூரி/பள்ளி யும் அல்ல அவர்கள் ஆசிரியர்களும் அல்ல அவர்கள் கூலி தொழிலாளிகள் ...... நான் விமர்சிக்கவில்லை ...... கல்லூரி/பள்ளி மற்றும் ஆசிரியர்கள் அவர்களின் தொழில் தர்மம் அங்கு இல்லை ......... ஏய் படிப்பு வராத மாணவனா என்னிடம் கொடுங்கள் நான் அவர்களை 100% தேர்ச்சி தருகின்றேன் என்றால் அவர்களிடம் ஆசிரியர்களின் தர்மம் உள்ளது

நன்றி: இந்தியாடுடே


LinkWithin

Related Posts with Thumbnails