Friday, August 14, 2009

குழந்தை வளர்ப்புக்கலை - பகுதி 2 (உடல் + உயிர் = மனம்)

குழந்தை பிறந்தப் பிறகு அதன் உடல் ஆரோக்கியம் மிகவும் முக்கியம் ஏனென்றல் உடல் நன்றாக இருந்தல்தான் உயிர் தேகம் நன்றாக இயங்கும் உடலும் உயிரும் நன்றாக இருந்தல்தான் மனம் நன்றாக இயங்கும் ஆகவே இந்த பகுதியில் உடல் மற்றும் உயிர் ஆரோக்கியம் பற்றி பார்க்கலாமா....

உடல்

நம் முன்னோர்களின் வாக்குபடி "உடல் வளர்தேன்னே உயிர் வளர்தேன்னே" என்ற திருமூலர் வாக்கு உண்மை. நம் உடலில் கடிகாரம் போல் காலை 03.00 மணி முதல் இரவு 02.59 வரை இரண்டு மணிநேரத்துக்கு ஒரு உடல் உறுப்பு இயங்குவதாக இந்தியா (சித்தா,ஆயுர்வேதம்) மற்றும் சீன மருத்துவ முறைகள் கூறுகின்றன ...... அதை இங்கு பார்ப்போம் .....


காலை 03.00 மணி முதல் 05.00 வரை: நுரையீரல்
புவி ஈர்ப்பு விசை மிகவும் குறைவு (மனம் மிகவும் அமைதியாக இருக்கும்) ஆகையால் தியானம், இறை வழிபாடு, குழந்தைகள் படிப்புக்கு ஏற்ற நேரம்.
குறிப்பு : இந்த நேரத்தில் ஆஸ்துமா உள்ளவர்கள் துங்க முடியாது. இவர்கள் சரியாக 03.00 மணிக்கு எழுந்து 05.00 மணிவரை இரும்மல் தொல்லியல் அவதியுறுவர்.


அதி காலை 05.00 மணி முதல் 07.00 வரை: பெருங்குடல்
இந்த நேரத்தில் காலை கடன்களான மலம் கழித்தல், பல் துலக்குதல், குளித்தல் ஆகியவற்றை செய்யவேண்டும்.
குறிப்பு : மலம் முட்டும்மாவது செய்து இருக்க வேண்டும். ஏன் என்றால் இன்று மருத்துவ மனைகளில் இறப்பவர்களின் 50 சதவிதத்தினர் இறக்கும் தருவாயில் மலம், ஜலம் சரியாக பிரியாமல் இறக்கின்றனர். ஆகவே சிறு வயது முதல் பெரியவர்கள் வரை காலை 05.00 மணி முதல் 07.00 வரைக்குள் மலம், ஜலம் கழிக்கவேண்டும் .

காலை 07.00 மணி முதல் 09.00 வரை :இரைப்பை
இந்த நேரத்தில் காலை உணவை முடித்து இருக்க வேண்டும்.

காலை 09.00 மணி முதல் 11.00 வரை: மண்ணீரல்
நாம் சாப்பிட்ட உணவை மற்ற உறுப்புகளுக்கு பிரித்து கொடுக்கும் நேரம். இந்த வேலை நடந்தால் தான் சுறுசுறுப்பாக இருக்க முடியும். தடைப்பட்டால் அன்று முழுவது சோம்பலாக இருப்பதை உணரலாம். ஆகையால் ......
குறிப்பு : இந்த நேரத்தில் அமுதம் (சாகாவரம் கொடுக்கும் உணவு) கொடுத்தாலும் உண்ண கூடாது என்றனர் நம் முன்னோர்கள். ஆகையால் இந்த நேரத்தில் தண்ணீர் கூட குடிக்கக்கூடாதென்று சொன்னார்கள்.

பகல் 11.00 மணி முதல் 01.00 வரை: இதயம்
இந்த நேரத்தில் தூங்க கூடாது.
குறிப்பு : இந்த நேரத்தில் தூங்கினால் இதய சம்பந்தப் பிரச்சனைகள் வரும்.

மதியம் 01.00 மணி முதல் 03.00 வரை: சிறுகுடல்
இந்த நேரத்தில் மதிய உணவை முடித்திருக்க வேண்டும்.

மாலை 03.00 மணி முதல் 05.00 வரை: சிறுநீரகப்பை
இந்த நேரத்தில் தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். ஜலம் கழிக்கவேண்டும்.
குறிப்பு : தினமும் ஏதாவது பழரசம் குடிக்க நினைத்தால் இந்த நேரத்தில் அதை குடிக்க வேண்டும். அதன் பலன் 100% உடம்பில் சேரும்.

மாலை 05.00 மணி முதல் 07.00 வரை: சிறுநீரகம்
குழந்தைகளை விளையாடவும் அல்லது நடைப் பயிற்சி செய்யவும் சிறந்த நேரம். நம் வேர்வை வெளியேற வேண்டும் .

இரவு 07.00 மணி முதல் 09.00 வரை: இருதய உறை
இரவு உணவு சாப்பிடலாம், தியானம் செய்யலாம்.
குறிப்பு : இந்த நேரத்தில் பாலோ, பால் சார்ந்த உணவுகளும் சாப்பிட கூடாது.

இரவு 09.00 மணி முதல் 11.00 வரை: நாளமில்லா சுரப்பிகள்
ஆறுதல் தேடும் நேரம், அறிவுரைகளை ஏற்கும் நேரம் ஆகையால் குழந்தைகளுக்கு அறிவுரை கூற நினைத்தால் இந்த நேரத்தில் கூறினால் குழந்தைகள் (பெரியவர்களும்) கேட்பார்கள்.

இரவு 11.00 மணி முதல் 01.00 வரை: பித்தப்பை
இந்த நேரத்தில் அழ்ந்தத் தூக்கம் தேவை.
குறிப்பு : தூங்கவில்லை என்றால் அழகு, அறிவு, பலம் குறையும்.

இரவு 01.00 மணி முதல் 01.00 வரை: கல்லீரல்
இந்த நேரத்தில் அழ்ந்தத் தூக்கம் தேவை.

இவ்வாராக இந்த காலச் சக்கரத்தில் தன் உடம்பினை பாதுகாத்தால் எந்த ஒரு பாதிப்பும் இல்லாம்மல் சுகமாக வாழ முடியும்.

உயிர்

குழந்தை பிறக்கும் போதே அவர்கள் சாப்பிடும் உணவில் இருந்து வரும் ரசம் ஆண்களுக்கு விந்துவாகவும் , பெண்களுக்கு நாதமாகவும் பிரித்து ஒரு குறிப்பிட்ட வயது வரைக்கும் (13 வயதிற்குள்) சதை, எலும்பு, மூளை ஆகியவை வளர்ச்சிக்கு தேவையான அளவு எடுத்து கொள்கின்றது. 13 வயதிற்கு மேல் தேவைக்கு அதிகமாக இருக்கும் சமயத்தில் அவைகள் வெளியேறுகின்றது. இதுவே பெண்களின் "பூப்பெய்த்தல்" சம்பவம் ஆகும். இந்த தருணத்தில் காயகல்ப பயிற்சி செய்ய வேண்டும். இந்தப் பயிற்சி அனைத்து பள்ளி கல்லூரிகளில் இலவசமாக நடத்துகின்றனர். தமிழகம் முழுவதும் இவர்களுக்கு கிளைகள் இருக்கின்றன அங்கு நாம் கட்டணம் செலுத்தி வகுப்புகளில் கலந்து கொள்ளலாம்.


நடத்துபவர்கள்:
Shri Vethathiri Maharishi World Community Service Centre (WCSC),
No.26, Second Seaward Street, Valmiki Nagar, Thiruvanmiyur, Chennai - 600 041.

மேலும் விவரங்களுக்கு மற்றும் கிளைகள் http://www.vethathiri.org/

Kayakalpa Course Fees
Individual Rs.100/-
Couple Rs.150/-
Student Rs.25/-

உடல் நலம் பெற உடற்பயிற்சி
உயிர்
வளம் பெற காய கல்ப பயிற்சி

மனநலம்
பெற தியானப் பயிற்சி


உடல்+ உயிர் = மனம்

மனம் சரியாக இயங்கினால் எந்த ஒரு செயலிலும் வெற்றி உறுதி.


Wednesday, August 12, 2009

குழந்தை வளர்ப்புக்கலை - பகுதி 1

குழந்தை வளர்ப்பு என்பது குழந்தை பிறந்த பிறகு அல்ல திருமணம் முதலே அது ஆரம்பமாகிறது

மனம் ஒத்த தம்பதியர்களாக இல்லற வாழ்கையை தொடங்குதல்

மனம் ஒத்த கணவன் மனைவி என்னவென்றால், ஆதி சங்கரரின் பெற்றோர்தான். ஒரு நாள் கணவன் மனைவி இருவரின் கனவிலும் சிவ பெருமான் வந்து உங்களுக்கு ஒரு குழந்தை தருகின்றேன் ஆனால் நல்ல குழந்தை என்றால் கொஞ்ச நாள் தான் உயிர் வாழ்வான். மோசமான குழந்தை என்றால் அதிகமான நாள் உயிர் வாழ்வான், உனக்கு எந்த குழந்தை வேண்டும் என்று வினவினார். உடனே எழும்பியவர் மனைவியும் எழும்பியதை பார்க்கிறார். மனைவியிடம் கேட்டார் ஏன் எழுந்தாய் என்று அதற்கு மனைவி கனவில் சிவ பெருமான் வந்ததை சொன்னார். மனைவியும் நீங்கள் ஏன் எழும்பினீர்கள் என்று வினவ கணவனும் கனவில் சிவ பெருமான் வந்ததை சொன்னார். வேகமாக மனைவி கணவனிடம் நீங்கள் என்ன சொன்னீர்கள் என்று கேட்க நான் எப்படி சொல்லுவது உன்னிடம் கேட்டு சொல்லுகிறேன் என்று எழுந்தேன் என்றார். நீ என்ன சொன்னாய் என்று கணவன் மனைவியிடம் கேட்க மனைவியும் நான் எப்படி சொல்லுவது உங்களிடம் கேட்டு சொல்லலாம் என்று எழுந்தேன் என்றார். நம்மில் எத்தனை நபர் இந்த முடிவை எடுப்போம் சொல்லுங்கள். இவர்களுக்கு தான் ஆதி சங்கரர் குழந்தையாக பிறந்தார். ஆகையால் இவர்களை போல் எந்த ஒரு செயலையும் கலந்து பேசி மனம் ஒத்த தம்பதியர்களாக இல்லற வாழ்கையை தொடங்க வேண்டும்.

ஆரோக்கியமான குழந்தை எப்போது பிறக்கும்?

மனம் ஒத்த தம்பதியர்களாக இல்லற வாழ்கையை தொடங்கி விபத்து போல நேர்ந்த ஓர் உறவில் கரு உருவாகக்கூடாது.தற்செயல் நிகழ்வாகவும் அது அமையக்கூடாது.திட்டமிட்டு,தேர்ந்தெடுத்து குழந்தையைப் பெற வேண்டும்.

அது எப்படி? குழந்தை உருவான பிறகுதான் அதற்கு உணர்வு வருகிறது என்றில்லை.விந்தணு,கருமுட்டை இரண்டுக்குமே உணர்வுகள் இருக்கின்றன என்கிறது ஆயிர்வேதம்.கருவில் உருவாகும் ஒரு குழந்தை,அதற்கு முந்தைய ஏழு தலைமுறையைச் சேர்ந்தவர்களின் குணங்களையும் தன்னுள் அடக்கிக்கொண்டு வளர்கிறது.

தாம்பத்திய உறவில் ஈடுபடும் இருவரின் மனம்,நேரம்,இடம்,அவர்களின் தேக ஆரோக்கியம்,கர்மவினை எல்லாம் சேர்ந்து தான் ஒரு குழந்தை எபடி இருக்கும் என்பதை தீர்மானிக்கின்றன.

உடலுறவுக்கு ஏற்ற காலம்

அஷ்டமி,பௌர்ணமி,அமாவசை,பிரதமை,சதுர்த்தி,சஷ்டி,ஏகாதசி,சதுர்த்தசி ஆகிய நாட்களில் உடலுறவு கூடாது..

வயிறு நிரம்ப உண்ட உடனேயும்,உணவு ஜீரணமாகதிருக்கும் போதும் உடலுறவு கூடாது.

இரவில் முதல் இரண்டு ஜாமத்திலும்,அதிகாலை நான்காம் ஜாமத்திலும் உடலுறவு கூடாது(6.00 p.m to 10.00 p.m) & (2.00 a.m to 4.00 a.m) நள்ளிரவு 10.00 மணி முதல் 2.00 மணி வரையிலும் அதிகாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரையிலும் உடலுறவுக்கு சிறந்தது.

மனைவி மாதவிடாய் ஆன நாள் முதல் 3 நாட்கள் வரை கணவன் அவளைச் சேரக்கூடாது.நான்காவது நாளில் மனைவியுடன் சேரவேண்டும்.

கர்ப்பகாலத்தில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் ஏனென்றால் கர்ப்பகாலத்தில் மனகசப்போ அல்லது நோய்வாய்ப்பட்டாலோ அது குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.எடுத்துக்காட்டாக மூன்றாவது மாதத்தில் குழந்தையின் கண் உருவாகும் என்று வைத்துக்கொள்வோம்,இந்த காலத்தில் நோய் ஏற்பட்டால் அது குழந்தைக்கு கண் சம்பந்தப்பட்ட பாதிப்புகளையோ அல்லது நோய்களையோ ஏற்படுத்த்தும்.ஆகவே நல்ல விஷயங்களை கேட்டுக்கொண்டு நல்ல கதைகளை கேட்டுக்கொண்டு இன்பமாக வாழ முயற்சி செய்யுங்கள்.இது முக்கியம்.

குழந்தை பிறக்கும் அதிசய செயல் விளக்கம் இங்கே...
நீங்கள் இதைப் படித்துக்கொண்டிருக்கும் இந்த நிமிஷத்தில் உலகத்தில் கால தேச வித்தியாசமின்றி எங்காவது ஒரு இடத்தில் ஒரு ஆணும் பெண்ணும் இயற்கை தங்களுக்கு பணிந்த கடமையைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.நாகரீகத்தால் இந்த செயலுக்கு வேண்டிய அர்த்தங்களும்,நாசூக்குகளும்,தேவைகளும்,பிடிவாதங்களும் ஏற்பட்டுவிட்டாலும் இயற்கை இதற்கு கொடுத்திருக்கும் மதிப்பு ஒன்றே ஒன்றுதான்-இனவிருத்தி.

ஆணும் பெண்ணும் இணைகிற இந்த உடலுறவின் இறுதியில் ஆண் உதிர்க்கும் திரவத்துக்கு 'விந்து' என்று பெயர் கொடுத்திருக்கிறார்கள்.நான் இன்சார்ஜாக இருந்த்தால் அதை 'விந்தை' என்று மாற்றி கெஜட் அறிக்கை விட்டிருப்பேன்.விந்தையான் திரவம்தான்! ஒருமுறை வெளிப்படும் சுமார் இரண்டு ஸ்பூன் திரவத்தில் 'ஸ்பெர்ம்கள்' என்று சொல்லப்படும் நுட்பமான உயிரணூக்களின் எண்ணிக்கை முப்பது கோடி.! இந்த முப்பது கோடி நுண்ணணுக்கள் ஒவ்வொன்றிலும் உங்கள்(உங்கள் என்றால் ஒரு பேச்சுக்கு...சம்பந்தப்பட்டவர் யாரோ அவருடைய!) இருபத்திமூன்றி குரோமோஸோம்கள் இருக்கின்றன.இந்த குரோமோஸோம்களில் அந்த ஆணின் அடையாளங்கள் அத்தனையும் டி.என்..நாடாவில் செஉதி ரூபமாக கருப்பா,சிவப்பா,குட்டையா,நெட்டையா,முசி சுருட்டையா,காது பெரிசா,மூக்கு எப்படி என்று எல்லாச் செய்திகளும்-அப்பா,அம்மா,தாத்தா,பாட்டிகளின் அத்தனை 'வம்சாவளிகளும்' பதிவாகி இருக்கின்றன.

இயற்கை சான்ஸே எடுத்துக்கொள்வதில்லை.பெண் உறுப்புக்குள் கர்ப்பப்பைக்கு முன்புள்ள ஸெர்விக்ஸ் வாசலில் விடப்பட்ட முப்ப்து கோடி நுண்ணணுக்களில் ஆயிரத்துக்கும் குறைவாகத்தான் தம் இலக்கை அடையப்போகின்றன.அவற்றில் ஒன்று தான் வெற்றி பெறப்போகிறது.இலக்கு என்ன? ஒரு நுட்பமான முட்டை எங்கிருந்து வந்தது? ஒரு பெண்ணின் பெல்வில் என்று சொல்லப்படும் இடுப்பு பகுதியில் இடது வலது பக்கத்தில் "ஓவரி " என்று சுமாராக பாதாம்பருப்பு சைஸூக்கு இரண்டு அங்கங்கள் இருக்கின்றன.இவற்றில் அவள் வாழ்நாளுக்குண்டான சப்ளை முட்டைகள் வைத்திருக்கிறாள்.பிறக்கும்போதே ஒரு பெண் சுமார் மூன்றரை லட்சம் முட்டைகளோடு பிறக்கிறாள்.சுமார் 12,13,வயது வரை முட்டைகள் "மெர்ச்சூர்" ஆகாமல் இருந்து பிறகு மாதத்துக்கு ஒவ்வொன்றாக மெர்ச்சூர் ஆகின்றது.இப்படி வாழ்நாளில் மெர்ச்சூர் ஆவது சுமார் 375 தான்.கண்ணுக்குத் தெரியாத ஊசிமுனை போன்ற இந்த முட்டைகளை ஒரு டீஸ்பூனில் சுமார் பத்து லட்சம் நிரப்பலாம்.மாதா மாதம் இந்த முட்டைகளில் ஒன்றை தேர்ந்தெடுத்து அதை ஒரு பயணத்துக்கு அனுப்புகிறாள்.வெளிப்பட்ட முட்டையின் வாழ்வு மொத்தம் 24 மணி நேரம்.அதற்குள் அது இந்த முப்பது கோடிப்பேரில் ஒருவனை-தன் காதலனைச் சந்திக்க வேண்டும்.இந்த சந்திப்புக்காக அந்த முட்டை அதிக நேரம் காத்திருப்பதில்லை.இரண்டு ஓவர்களிலிருந்து இரண்டு பலோப்பியன் குழாய்கள் பிரிந்து பெண்ணின் கர்ப்பப்பையுடன் கனெகஷன் பண்ணுகிறது.இந்தக் குழாய் ஒன்றில் பாதி தூரம் போய் இங்கேயே ஈரமாக,கதகதப்பாக,இருட்டாக,சௌகரியமாக இருக்கிறது.காத்திருக்கலாம்..


அவன் வரட்டும் என்று உட்கார்ந்து கொள்கிறது.இதனிடையில் முப்பது கோடி உயிரணுக்களும் ஒரே குறிக்கோளுடன் கிளம்புகின்றன.சின்ன தலை ஒரு வால்,அதை வைத்துக்கொண்டு நீச்சல் போல மெல்ல மெல்ல துடித்துக்கொண்டு நுழைய முற்படும் போதே முப்பது கோடியில் பாதி அம்பேல்.தலையை விட ஒன்பது பங்கு நீள வால்.அளவு? ஒரு அங்குலத்தில் ஐந்நூறில் ஒரு பாகம்.முட்டையை அடைய மொத்த பயணம் செய்ய வேண்டிய தூரம் சுமார் அஞ்சு இன்ச்.அதன் சைஸூடன் நம்மை ஒப்பிட்டால் இது ஐந்து மை எதிர்நீச்சலுக்கு சமம்.கஷ்டமான பகுதி எந்த குழயில் முட்டை,எது காலி குழாய் என்பது தெரியாமல்...பாதி பாதியாகப் பிரிந்து முண்டியடித்துக்கொண்டு மேலே சென்று பாலோப்பியன் டியூப்புக்குள் இருக்கும் முட்டையை அடைவதற்குள் ஆயிரத்துக்கும் கம்மியே மிஞ்சுவர்.இந்த ஆயிரத்திலும் ஒன்றுதான் கடைசியில் முட்டையினுள் நுழைகிறது.மூன்று மணி நேர பயண்த்துக்குபிறகு கதவை தட்டினால் "கமின்" ஒரே ஒரு ஆளுக்கு தான் அனுமதி.உள்ளே நுழைந்ததும் முட்டை "ஹவுல்புல்"போர்டு கொடுத்து மற்ற பேரை தடை செய்கிறது.உள்ளே நுழைந்தவனை "வா,உனக்காகத்தான் காத்திருக்கிறேன்" என்று அரவணைத்து ஐக்கியப்படுத்திக் கொள்கிறது.

ஆண் வெளிப்படுத்தும் ஒவ்வொரு உயிரணுவும் ஒரு அதிசயமான விஷயம்.சுமார் 0.05 மில்லிமீட்டர்.அதற்கும் தலை,நடுப்பகுதி,வால் எல்லாம் உண்டு.உயிரணு என்கிற "விண்வெளிக்கலத்தை" கிளப்பிச்செல்லும்"ராக்கெட்டாக" அதன் வால் பயன்படுகிறது.பெண்ணின் முட்டையை ஆணின் உயிரணு துளைத்தவுடன் வாலின் வேலை ஓவர்.முட்டையை நோக்கி நீச்சல் அடிப்பதற்கு பெட்ரோல் மாதிரி சக்தியை தருவது நடுப்பகுதி.

"ஸ்பெர்ம்"ன் தலைப்பகுதியில்தான் ஆண் தன் பங்குக்கு அனுப்பும் 23 குரோமோஸோம்கள் உள்ளன.அவனுடைய உயரம்.முன்கோபம்,மூக்கு,கிடார் வாசிக்கும் திறமை எல்லாம் அதில் அடங்கியிருக்கலாம்.இந்த குரோமோஸோம்களை அக்ரோஸம் என்னும் ஒரு குட்டி "ஹெல்மெட்" பாதுகாக்கிறது.முட்டையைத் துளைத்து உள்ளே நுழையும் போது இந்த "ஹெல்மெட்டை" ஸ்பெர்ம் கழட்டி எறிந்து விடுகிறது.இந்த ஹெல்மெட்டில் இயற்கை ஒரே ஒரு Enzyme-ஐப் பொருத்தி இருப்பது இன்னொரு அதிசயம்.கொஞ்சம் கடினமாக உள்ள பெண்ணின் முட்டையை மிருதுவாக்குவது இதுதான்.ஸ்பெர்ம் உள்ளே நுழைவதைச் சுலபமாக்குவதற்காக! இல்லாவிட்டால் முட்டையை முட்டிக்கொண்டே இருக்க வேண்டியதுதான்!

பெண்ணின் வயிற்றுக்கு கீழ்ப்பகுதியில் வலது,இடமாக இருக்கும் இரண்டு ஓவரிகள் தான் முட்டைகளை தயாரிக்கும் தொழிற்சாலை.ஆணுக்கு விரைகளைப்போல பெண்ணுக்கு ஓவரி.அங்கிருந்து ப்லோப்பியன் டீயூப் என்னும் "தெரு" வழியாக முட்டை கர்ப்பப்பை என்னும் "மெயின் ஆபிஸை" நோக்கிப் பயணம் செய்கிறது! வரும் வழியில் தான் குதுகூலமாக நீந்தி வரும் ஆணின் உயிரணுவைச் சந்தித்து இணைகிறது.

முட்டைக்குள் ஸ்பெர்ம் வெற்றிகரமாக நுழைந்தவுடன் உள்ளே ஏகப்பட்ட பரபரப்பான விஷயங்கள் நிகழ்கின்றன.24 மணி நேரத்துக்குப் பிறகு ஸெல் இரண்டாகப் பிரிகிறது.இதற்கி பிறகு வேகமாக 4,8,16 என்று விருத்தி அடைகின்றன.கர்ப்பப்பையை நோக்கிப் பயணம்.ஒரு மாதத்தில் மில்லியன் கணக்கில் ஸெல்கள் ரெடி.எந்தெந்த ஸெஸ்கள் எந்தெந்த வேலையை செய்யப்போகிறது? காதாகவா? மூக்காகவா? மூளையாகவோ? இதயமாகவோ? விரலாகவோ? முழங்காலாகவா? போன்ற விஷயங்களெல்லாம் முடிவு செய்யப்பட்டாகி விட்டன.

இந்தக் கண்த்தில்தான் புதிய உயிர் துவங்குகிறது.இதுவதை கம்மென்று இருந்த முட்டை புதியவனைக் கண்டதும் புளகாங்கிதம் அடைந்து "வா, உன் க்ரோமோஸோம்களை கொடு, என்னிடமும் இருபத்திமூன்று இருக்கிறது.இரண்டையும் சேர்த்து ஒரு புதிய உயிரை அமைக்கலாம்.நீ என்னப்பா எக்ஸா,ஒய்யா,என்றால் எக்ஸ் என்றால் பெண்,ஒய் என்றால் ஆணை உண்டாக்கலாம்.இதுதான் இந்த பேட்டையில் வழக்கம்" என்கிறது.

முட்டைக்குள் 'ஸ்பெர்ம்' நுழைந்து ஒரு ஸெல்லாகி பாதி பாதியாக பிரிந்து இரண்டு ஸெல்லாகிறது.இரண்டு நாலாகிறது.இந்தக்குழாயில் இருந்தால் ஆபத்து..வா நாமெல்லாம் கர்ப்பப்பைக்குள் போய்விடலாம் என்று முட்டை புறப்பட்டு விடுகிறது."யூட்டிரஸ்" என்னும் கர்ப்பப்பைக்கு போகும் போது இரண்டு நாலு,எட்டு பதினாறு என்று பெருகிக்கொண்டே போகிறது.யூட்டிரஸில் ஒரு லைனிங் மாதிரி இருக்கிறது.அதை மெல்ல மெல்ல துளைத்து தன்னைச் சுற்றி சாப்பாட்டு சாப்பாட்டு விஷயங்களை கவனித்துக் கொள்வதற்காக "ட்ரோபோப்ளாஸ்ட்" என்று ஜவ்வு அமைத்துக்கொள்கிறது.சுற்றிலும் "ப்ளஸெண்ட்டா" என்று திரை அமைத்துக்கொள்கிறது.இப்போது சுறுசுறுப்பாக வேலை நடக்கிறது.ஸெல்கள் இரட்டித்து இரட்டித்துப் பெருகி உள்ளுக்குள் ஒரு எட்டு ஷேப்புக்கு மாறுகிறது.ஒரு மாசத்துக்குள் முட்டை கருவாக இருந்தது சுமார் கால் இன்ஞ் சைஸுக்கு வளர்ந்து அதிலேயே துளியூண்டு தலை,உடல்,வேலை செய்யும் ஒரு சின்ன இதயம் கொஞ்சம் ரத்தம்,பேருக்குக் கை,கால்கள்,வயிறு,மூளை(ஏன்.ஒரு தேவையில்லாத வால் கூட).பிற்காலத்தில் மனுஷ ரூபத்துக்கு உண்டான அத்தனையும் மினியேச்சர் வடிவத்தில் வந்துவிடுகிறது.அம்மாவிடம் ப்ளஸெண்ட்டா வழியாக ரத்தம் வாங்கிக்கொண்டு அதைத் தொப்புள் கொடியின் மார்க்கமாக உள்ளே சேர்த்துக்கொள்கிறது.

கடைசி மாதவிலக்கின் முதல் நாளிலிருந்து இருநூற்று எண்பதாவது நாளில் பத்து சதவிகிதம் குழந்தைகள் பிறந்து விடுகின்றன.எழுபத்தைந்து சகவிகிதம் இன்னும் இரண்டு வாரம் தள்ளிப்பிறக்கின்றன.இப்போதெல்லாம் மேலை நாடுகளில் குழந்தை பிறந்தவுடன் உடனே தொப்புள் கொடியை கட் பண்ணாமல் கொஞ்ச நேரம் படுக்கவிட்டு,கண்வனையும் வரவழைக்கிறார்கள்.

ஒன்பது மாதங்களில் இந்த அபார முன்னேற்றத்தின் ஆதாரச்செயல் ஒரு ஸெல் இரண்டாகப்பிரிவதுதான்.இதில்தான் தினப்படி நிகழும் இந்த மகா ஆச்சர்யத்தை விஞ்ஞானம் கணத்துக்கணம் அலசிவிட்டாலும் பரிணாம தத்துவத்தின் படி இதன் ரசாயண்த்தின் சரித்திரம் விளக்கப்பட்டாலும்,ஏன் என்ற அதி ஆச்சர்யம் மிச்சமிருக்கிறது..

LinkWithin

Related Posts with Thumbnails