Thursday, March 25, 2010

குழந்தைகளை கொஞ்சம் பழக விடுங்கள்

சமீபத்தில் என் நெருங்கிய நண்பரோடு, நண்பரின் குடும்ப விழாவிற்கு அவரது உறவினர்கள் வீட்டிற்கு அழைப்பிதழ் கொடுக்க நானும் சென்றேன். உறவினர் வீட்டின் அழைப்பு மணியை அழுத்தினோம். கதவை திறந்தவுடன் வீட்டில் உள்ள பெரியவர் எங்களை வரவேற்க வீட்டின் மற்றொரு பெண் ஒருவர் மூன்று குழந்தைகளை ஒரு அறைக்கு செல்ல ஆணை பிறப்பித்தார்.....அந்த குழந்தைகள் விருப்பம் இல்லாமல் செல்வதை பார்க்க முடிந்தது. இந்த காலத்தில் குழந்தைகளை மற்றவர்களிடம் பழக விடுவதில்லை, உறவினர்கள் எவரையும் அறிமுகம் படுத்துவதில்லை......ஏன் இந்த நிலை ..... ஏன் அந்த குழந்தைகளை மற்றொரு அறைக்கு போக சொல்ல வேண்டும்.


வீட்டின் பெரியவர்கள் தான் குழந்தைகளை மற்றவர்களோடு பழக வாய்ப்பு அளிக்க வேண்டும். வீட்டின் அருகில் உள்ளவர்கள், பள்ளி/கல்லூரி நண்பர்கள் , உடன் பணிபுரியும் நபர்கள் ஆகியோர்களை சகோதர /சகோதிரிகளாக நினைக்கும் படி உறவின் சுகங்களை உணர வைக்க வேண்டும். ஆனால் இப்போது பத்தாம் வகுப்பு மாணவி உடன் படிக்கும் மாணவனை காதலித்து தோல்வி பயத்தால் தற்கொலை ......... சகோதரனாக பார்க்க வாய்ப்பை உருவாக்கி கொடுக்கவில்லை இந்த சமுதாயம் ....... வீட்டில் ஒரே குழந்தை மட்டும் இருப்பதால் ......... இந்த சகோதரத்துவம் இல்லாமலே சுயமாக வாழ பழகி விட்டனர். நிலைமை இப்படி இருக்க குழந்தைகளுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டிய நாம் ............ சொத்துக்காக, பணத்துக்காக சண்டைபோட்டுநீதிமன்றத்துக்கு சென்று கடைசியில் (சகோதரன்) சகஉதிரத்தைக் கூட கொல்லக் கூடதயங்குவதில்லை.

குழந்தைகளை மற்றவர்களோடு பழக விடாமல் இருக்கும் நிலைமை தொடர்ந்தால்........மற்றவர்களோடு பழகாமல் எதாவது செயலுக்கும் மற்றவர்களை நாடும் பொழுது .... உதவி கேட்கக்கூட .தயக்கம் தயக்கம் தயக்கம்....இந்த தயக்கம் எந்தவிதமுன்னேற்றத்துக்கு வழிவகுக்காமல்......எந்த ஒரு சிறு செயலுக்கு நம் வீட்டுபெரியவர்களை ...... நாட வேண்டியுள்ளது.........ஆகவே தயவு செய்து குழந்தைகளை மற்றர்வர்களிடம் விளையாட அனுமதித்து பழக வாய்ப்பு கொடுங்கள்.

குழந்தைகளை தூங்க விடுங்க.....


நன்றி : தோழி மாத இதழ்

குழந்தைகள் சண்டை போடணும்
நன்றி: தோழி மாத இதழ்

Sunday, March 21, 2010

தலை கீழா நின்னாலும் உனக்கு படிப்பு வராது....

அந்த காலத்துல தலை கீழா நின்னா படிப்பு நல்லா வரும் என்று சிரசாசனம் (யோகா) செய்வார்கள். ஆக தலை கீழா நின்னா படிப்புவருமா?........ படிப்புவரும் என்பது உண்மை. சிரசானம் பற்றிய ஒரு சிறு அறிமுகம் .....

கிங் ஆப் தி ஆசனம், ஆசனங்களின் அரசன் என்று சொல்வது இந்த சிரசானத்தைத் தான், நம் உடம்பினுடைய மொத்த இயக்கங்களின் கட்டுப்பாடும், செயல்பாடும் மூளை நரம்பு மண்டலத்திற்குட்பட்டு இருக்கிறது, இது தலைபகுதியில் மண்டை ஓட்டிற்குள் இருக்கிறது, இந்த மூளை நரம்பு மண்டலத்திற்கு ஆதார சக்தி பிட்யூட்டரி சுரப்பி, உடம்பில் 7 சுரப்பிகள் உள்ளன.

இந்த பிட்யூட்டரி சுரப்பிதான் மற்ற அனைத்து சுரப்பிகளையும் கட்டுப்படுத்துகிறது, நம் வீட்டில் டியூப்லைட். பேன் போன்ற எத்தனையோ மின்சாதனங்கள் இருக்கின்றன, ஒவ்வொரு பொருளை இயக்குவதற்கும் ஒரு தனித்தனியான சுவிட்சின் கட்டுப்பாடு உள்ளது, அனைத்து மின் சாதனங்களுக்கும் வரும் மின்சாரம் நம் வீட்டின் மெயின் போர்டிலிருந்து வருகிறது, மெயின் போர்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டால் வீட்டின் மொத்த மின்சாரமும் தடைபட்டுவிடும். துண்டிக்கப்பட்டுவிடும், நம் உடம்பில் மின்சாரத்தை சப்ளை செய்யும் மெயின் போர்டுதான் மூளை ஆகும், இந்த சிரசாசனத்தில் உடலின் ஒட்டு மொத்த இயக்கங்களுக்கு ஆதாரமாக இருக்கும் மூளை நரம்பு மண்டலத்திற்கும் பிட்யூட்டரி சுரப்பிக்கும் அதிகபட்சமான இரத்தமும். பிராணசக்தியும் இவ்வாசனத்தில் கொண்டு செல்லபடுவதால் இவ்வாசத்திற்கு ஆசனங்களின் அரசன் என்று பெயரிட்டனர், உடலின் எந்த ஒரு உறுப்பும் இயங்க வேண்டும் என்றால் அதற்கு தேவையான மூலசக்தி இரத்தமும். பிராணசக்தியும் தான், உடல் முழுவதும் இரத்தத்தினுடைய ஓட்டமும் பிராணனுடைய இயக்கமும் சரிசமமாக இயக்கப்படும் போது அனைத்து உறுப்புகளும் இயங்குகின்றன, நோய் என்ற ஒன்று வருவதற்கு வாய்ப்பில்லை,

எந்த ஒரு செயலுக்கும் பிராணசக்தி செயல் மிகவும் முக்கியம்.......படிப்பதற்கு முன்பு சிறிது நேரம் சிரசாசனம் செய்து படித்தால் நல்ல முறையில் புரியும். ஒரு சிறுகுறிப்பு என்னவென்றால் நல்ல யோக குருவிடம் நீங்களோ அல்லது உங்கள் குழந்தையோ இந்த சிரசாசனம் செய்யலாமா என்று கலந்து ஆலோசிக்கவேண்டும்.

ஆகையால் தான் சரியாக படிக்காத மாணவர்களை நீ தலை கீழா நின்னாலும் உனக்கு படிப்பு வராது என்று திட்டுவார்கள் ஆசிரியர்கள்.

Saturday, March 20, 2010

குழந்தை வளர்ப்பு கலை - சுகி. சிவம் அவர்களது பார்வையில்.. Audioநன்றி : தோழி மாத இதழ்

LinkWithin

Related Posts with Thumbnails