Wednesday, February 10, 2010

பாசத்திற்கும்,நேசத்திற்கும் ஏங்கும் குழந்தைகள் - குழந்தை வளர்ப்புக்கலை பகுதி-8

பத்தாம் வகுப்பு மாணவன் ரூபாய்.650க்கு சக மாணவனை கொன்றுள்ளான்.பணம் கொடுத்த மாணவன் திருப்பி கேட்கும்பொழுது பள்ளி முதல்வர் மற்றும் தாய், தந்தையோரிடம் சொல்லிவிடுவேன் என்று கூறியதால் பதற்றத்தில் பீங்கானால் அடித்து கொன்றதாக தன்னோட வாக்குமூலத்தில் போலீஸாரிடம் தெரிவித்துள்ளான்.

மற்றொரு
சம்பவம்:- ஒரு வங்கியின் கிளை மேலாளர் தற்கொலை. கடன் தொல்லையில் கடன் கொடுத்தவர்கள் மற்றவர்களிடம் சொல்லி மானத்தை வாங்குவேன் என்று சொன்னதால் பதற்றத்தில் தற்கொலை செய்ததாக கடிதத்தில் எழுதிவைத்து இறந்து உள்ளார்.

மேலே கூறப்பட்டுள்ள இரண்டு சம்பவத்திற்கும் ஒரே காரணத்தை சொல்லலாம்.இந்த காரணத்தை ஆராயும் முன் சின்ன சிந்தனை.

ஒவ்வொரு மனிதனும் தன் எண்ண ஓட்டத்திற்கு வாழாமல் மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்று நினைத்து தான் நினைத்தபடி வாழாமல் மற்றவர்கள்(சமூகம்) நினைத்தபடி வாழ்ந்து வாழ்க்கையின் பல இன்பங்களை தொலைத்துவிடுகின்றனர்.எடுத்துக்காட்டாக ஒரு மஞ்சள் நிற சட்டை என் விருப்பத்திற்கு நான் வாங்கி போட்டுக்கொண்டு அந்த சட்டை நன்றாக இருக்கிறது மற்றவர் அங்கீகரிக்க எதிர்பார்க்கிறோம்(மச்சி இந்த சட்டையில அஜித் மாதிரி அசத்துற..விஜய் மாதிரி கலக்குற..).இவ்வாறாக மற்றவர் போல்(அஜித்,விஜய்) நீங்கள் இருக்கிறீர்கள் என்று அந்த சட்டைக்கு மற்றவர்களுடைய(சமூகம்) அங்கீகாரம் தேவைப்படுகிறது.யாரவது ஒருவர் இந்த சட்டை நன்றாக இல்லை என்று சொன்னால் அந்த சட்டை மறுபடியும் விரும்பி போடமாட்டோம்.இவ்வாறாக வாழ்க்கையின் ஒவ்வொரு விஷயங்களிலும் இந்த சமூகத்தின் அங்கீகாரம் ஏதோ ஒரு ரூபத்தில் நமக்கு தேவைப்படுகிறது.

இவ்வாறாக தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்ற சுயசிந்தனை இல்லாமல், இந்த பிரச்சினை எப்படி கையாள்வது என்ற நோக்கம் இல்லாமல், ஒரு சில நொடிகளில் பதற்றத்தில் எடுக்கப்படுகின்ற இந்த ஒரு முடிவுதான் மாணவனை கொலைசெய்தல், பல வங்கி ஊழியர்களை கையாளுகின்ற நல்ல கல்வித்திறன் கொண்ட, மனபக்குவம் கொண்ட ஒரு வங்கி மேலாளர் பதற்றத்தில் சில நொடிகளில் எடுத்த இந்த தற்கொலை முடிவு என்றால்...சிறு குழந்தைகளையோ/மாணவ-மாணவியர்கள், படிக்காத பாமர மக்களையோ,ஏன் இவ்வாறு தவறு செய்தார்கள் என்று நாம் எப்படி குறை சொல்ல முடியும்.

இதை சரி செய்ய என்ன செய்யலாம்....சில ஆண்டுகளுக்கு முன்னால் நம் வீட்டு பெரியவர்கள் பொய் சொல்லக்கூடாது,திருடக்கூடாது,மற்ற உயிரினங்களை துன்பப்படுத்தக்கூடாது,வயதில் மூத்தவர்களை மதிக்கவேண்டும், என்று நீதிக்கதைகளையும்,புராணங்களையும், சொல்லி குழந்தைகளை வளர்த்தனர்.குழந்தைகளின் ஆழ்மனமானது பசுமரத்தாணி போல பதிந்துவிடும்.இவ்வாறாக பதியும்பொழுது எதிர்காலத்தில் சின்னதவறு கூட செய்யநினைக்காது மனம்.ஆகையால்தான் நம் முன்னோர்கள் நல்ல விஷயங்களை பார்ப்பது, நல்ல விஷயங்களை செய்வது என்று நல்ல எண்ணங்களை குழந்தைகளின் மனதில் தூவிவிட்டனர். ஆகையால் அனேகமான பிரச்சனைகள் அந்தகாலங்களில் கிடையாது.ஆனால் இப்பொழுது குழந்தைகளின் மாலைப்பொழுது புத்தகத்தை மனப்பாடம் செய்யவே செலவிடப்படுகிறது.விளையாட்டு நேரங்களில் கூட தொலைக்காட்சி,(jetix-power rangers) கம்யூட்டர் கேம்ஸ்,போன்றவையே குழந்தைகளின் மனதில் ஆக்கிரமித்துள்ளன.பிறகு எப்படி அவர்களுடைய மனம் நல்ல சிந்தனைகளை தூண்டும்....ஏனென்றால் இன்று அனேக வீடுகளில் குழந்தைகளுக்கு கதை சொல்ல தாத்தா பாட்டி இல்லை.அப்படியே இருந்தாலும் அவர்களுக்கு மரியாதை இல்லை.சீர்படுத்த வேண்டிய தாய்,தந்தையர் இயந்திரத்தனமான உலகத்தில் பணம் சம்பாதிக்க பணத்தைதேடி அலைகின்றனர்.குழந்தைகள் எப்பொழுதும் பாசத்திற்கும்,அன்பிற்கும்,சொந்தங்களுக்கும் ஏங்குகின்றன.அதற்கான சந்தர்ப்பங்களை பெற்றோர்கள் கொடுக்க வேண்டும்.


இவ்வாறாக மனித வாழ்க்கை ஒரு சங்கிலி தொடர்போல அமைந்துள்ளது.ஆகையால் வாழ்க்கையில் ஏதோ ஒரு தருணத்தில் ஏற்படும் ஒரு இழப்பு(தாத்தா,பாட்டி இல்லாமல் தனிக்குடித்தனமாக வாழ்வது) அவனுடைய வாழ்க்கை முழுவதும் பிரதிபலிக்கின்றது.

இந்த விஷயத்தை பற்றி காலையில் ஸ்வாமி ஓம்கார் அவர்களிடம் கருத்து பரிமாற்றம் செய்யும் பொழுது அவர்கள் என்னிடம் பகிர்ந்து கொண்ட ஒரு விஷயம் குழந்தைகளுக்கு எந்த ஒரு விஷயத்தையும் நாம் சொல்லிக்கொடுக்க தேவையில்லை. ஒவ்வொரு பெற்றோரும் தர்மத்தின்படி ஒழுக்கநெறியுடன் வாழ்ந்தால் குழந்தைகளும் அவ்வாறே வாழ்வார்கள். இதை கருத்தில் கொண்டு ஒவ்வொரு பெற்றோரும் தனிநபர் ஒழுக்கத்தோடு வாழும்போது வெற்றி நிச்சயம்..

இது எவ்வாறு சாத்தியம் என்றால் இன்று எவ்வளவோ புத்தகம் வந்து இருந்தாலும் திருக்குறளுக்கு நிகராக எந்த ஒரு புத்தகமும் உயிர்வாழ்வதில்லை. காரணம் திருவள்ளுவர் ஒரு குறளை எழுதுவதற்குமுன் அந்த குறளின்படி வாழ்ந்தார்,எழுதினார் இன்னும் அந்த புத்தகம் உயிரோடு இருக்கிறது.ஆகையால் குழந்தைகளுக்கு ஒரு எடுத்துக்காட்டாக வாழ்ந்தால் நம் குழந்தைகளும் அவ்வாறே வாழ்வார்கள்..ஆனால் நம் பெற்றோர்கள் குழந்தைகளை பொய் சொல்லாதே என்று அடித்து கண்டித்து வளர்க்க முற்பட்டாலும் நாம்(பெற்றோர்கள்) பொய் சொன்னால் நம் குழந்தையும் பொய் சொல்லும் என்பது மாற்ற முடியாத உண்மை.

6 comments:

அண்ணாமலையான் said...

அவசியமான பதிவு...

சிவகாசி ராம்குமார் said...

வருகைக்கு நன்றி திரு. அண்ணாமலையான்

aman said...

Nice...

Hari Haran said...

kootu kudumbam yendru marupadiyum uyir peruhirathoo andru dan nam kalacharam uyir perum...

kala sriram (pudugaithendral) said...

அருமை.

Bogy.in said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

LinkWithin

Related Posts with Thumbnails