Friday, January 08, 2010

கல்வி என்பது எப்படி இருக்கவேண்டும்? குழந்தை வளர்ப்புக்கலை - பகுதி 6

























கல்வி
என்பது எப்படி இருக்கவேண்டும்? ஒரு குழந்தையின் உடல் வளர்ச்சி மன வளர்ச்சிக்கு ஏற்ப பாடத்திட்டகள் இருக்கவேண்டும். சில ஆண்டுகளுக்கு முன்னால் அப்படித்தான் இருந்தது, ஆனால் இப்பொழுது 1997 இல் நான் 10 ஆம் வகுப்பில் படித்த பாடங்களை இப்போது 3 வகுப்பு தனியார் பள்ளி மாணவன் மனப்பாடம் செய்துகொண்டு இருகின்றான். கல்வி என்பது புதியதாக எல்லா விஷியங்களையும் கற்க ஆர்வத்தை தூண்டும் வகையில் இருக்க வேண்டும், மிகவும் முக்கியம் குழந்தைகள் பள்ளிக்கு விருப்பத்துடனும் ஆசையுடனும் வரும் வகையில் பள்ளி ஆசிரியர்களும் பள்ளியும் செயல் படவேண்டும். வெறும் மதிப்பெண் வாங்க மட்டுமே பள்ளி என்று மாணவன் நினைத்து விடக்கூடாது. தற்போதைய நம் இந்திய கல்வி முறை அப்படி இல்லை, பழைய நம் பாரத குருகுல கல்வி சிறந்தது. ஆனால் தற்போது இது நடைமுறையில் இல்லை. உலகின் பல்வேறு நாடுகளில் நடை முறையில் உள்ள Dr. Montessori அவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட மாண்டிசோரி முறையை பயன்படுத்தலாம். இந்த முறை குழந்தைகளின் உடல் வளர்ச்சி மன வளர்ச்சிக்கு ஏற்ப பாடத்திட்டங்களை கொண்டது. மேலும் இதன் சிறப்பு அம்சம் என்னவென்றல் தன்னம்பிகை மற்றும் நம் வேலைகளை நாம் தான் செய்யவேண்டும் என்ற மனபக்குவத்தை சிறு வயதில் உருவாக்குவது. தமிழ் நாட்டில் நிறைய மாண்டிசோரி பள்ளிகள் உள்ளன.

சரி என் கருத்துக்கு வருகின்றேன் .... சில நாட்களுக்கு முன்னால் ஒரு செய்தி படித்தேன், என்னவென்றல் இந்தியாவில் சென்ற ஆண்டு மட்டும் 1 லட்சம் குழந்தைகள் பள்ளிபடிப்பிற்கு பயந்து வீட்டைவிட்டு ஓடியவர்கள் .....இது அரசாங்க பதிவின் படி ......நிஜத்தில் அதிகம் என்கிறது ஒரு கருத்துக்கணிப்பு. தமிழ்நாடில் நடத்த ஒரு சம்பவம்












நன்றி: தினமலர்

2 comments:

butterfly Surya said...

அருமையான இடுகை.

Parents Clubல் இணைக்கலாம்.

வாழ்த்துகள்.

pudugaithendral said...

வாழ்த்துக்கள் சிவக்குமார்,

பேரண்ட்ஸ் கிளப்புக்கு நீங்கள் எழுதிய மடல் கண்டு அங்கேயிருந்த லிங்கை தொடர்ந்து வந்தேன். பல அரிய தகவல்கள். பேரண்ட்ஸ் கிள்ப் முகப்பில் உங்கள் வலைத்தளத்தையும் சேர்த்துவிட்டேன்.

பாராட்டுக்கள்

LinkWithin

Related Posts with Thumbnails