இன்றைய இயந்திரமயமான வாழ்க்கையில் சகோதரனிடம் (சக உதிரம் = சக இரத்தம்) கூட உறவை வளர்க்கக் கடினமாக இருக்கிறது. இன்றைய சூழ்நிலை இப்படி இருக்க நாம் எப்படி நமக்கு தெரியாதவர்களிடம் கூட உறவை வளர்க்க முடியும்.....முடியுமா?
ஐரோப்பாவில் சில ஆண்டுகளுக்கு முன்னால் இந்தியாவை போன்றே இன வேறுபாடுகள் இருந்தது. உயர் இனத்தினர் அரசாங்கத்தின் பல உயர் பதவிகளில் இருந்தனர். இந்த நிலையில் ஒரு கீழ் இனத்தை சார்ந்த ஒரு விவசாயி தினமும் தனக்கு சொந்தமான விளை நிலத்தில் வேலை செய்து கொண்டு வந்தான். ஒரு நாள் ராணுவ உயர் அதிகாரி ஒருவர் தன்னுடைய நிலத்தில் நடத்து செல்வதை கண்டான். மரியாதை நிமிர்த்தமாக கைகளை கூப்பி "Good Morning" என்று சொல்ல அந்த அதிகாரி எந்த விதமான செயலையும் விவசாயிடம் சொல்லவும் இல்லை செய்யவும் இல்லை. இப்படியாக தினமும் அதிகாரி அந்த வழியாக செல்ல விவசாயி தினமும் "Good Morning" என்று சொல்ல அந்த அதிகாரி நடந்து மட்டும் சென்று விடுவார். இப்படியாக பல வருடங்கள் சென்றது, இருந்தாலும் விவசாயி தன் செயலை விடவில்லை. அதிகாரி எதையும் கண்டுகொள்ளவில்லை. ஒரு நாள் இன கலவரம் உருவாகி கீழ் இன மக்களை கொன்று குவித்தனர். தண்டனை எப்படி என்றால் தலையை மேசை மீது வைக்க வேண்டும் அப்போது மேலிருந்து ஒரு கத்தி வந்து தலையை துண்டாக வெட்டிவிடும். இந்த தண்டனை நம் கதையில் வரும் அதிகாரி முன்னிலையில் நடந்தது. இந்த விவசாயின் தண்டனை நிறைவேற்றும் போது அதிகாரியை பார்க்க நேர்ந்தது அப்போது மீண்டும் "Good Morning" என்று சொன்னார். அந்த உயர் அதிகாரி விவசாயியைத் தன் பக்கம் அழைத்து கொண்டார். அந்த விவசாயி மரணம் அடையாமல் பாதுகாக்கப்பட்டார்.
இது போல் நாம் அனைவரும் மற்றவர் எப்படியோ நாம் நம் அன்பை மற்றவர்களிடம் காட்டினால் பல இடங்களில் (வீடு, அலுவலகம்) நிறைய துன்பங்களிருந்து விடுபட்டு இன்பமாக வாழ ஒரு வழி.
நான் கல்லூரியில் படித்து கொண்டிருக்கும் போது அந்த கல்லூரி நிர்வாகத்தின் கீழ் உள்ள தொழிற்சாலை தொழிலாளர்களும் நிர்வாகத்தினரும் கண்டு பேசும் தினமாக (பொங்கல் தினத்தன்று) விழா கொண்டாப்பட்டது. அப்போது அங்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு இருந்த அந்த நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும் கல்லூரியின் முதல்வர் கண்டு பேசும் தினத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாகச் சொன்ன இந்தக் கதை என்னை மிகவும் சிந்திக்க வைத்தது.
இந்த கதையைச் சொன்னவர், எந்த வேலை ஆனாலும் அதை எப்படி முறையாகச் செய்வது என்று எனக்கு சொல்லி கொடுத்த ஆசான் எங்கள் கல்லூரி முதல்வர்...
திரு.D.பாலசுப்பிரமணியம் B.E., M.S., முதல்வர்,ஐரோப்பாவில் சில ஆண்டுகளுக்கு முன்னால் இந்தியாவை போன்றே இன வேறுபாடுகள் இருந்தது. உயர் இனத்தினர் அரசாங்கத்தின் பல உயர் பதவிகளில் இருந்தனர். இந்த நிலையில் ஒரு கீழ் இனத்தை சார்ந்த ஒரு விவசாயி தினமும் தனக்கு சொந்தமான விளை நிலத்தில் வேலை செய்து கொண்டு வந்தான். ஒரு நாள் ராணுவ உயர் அதிகாரி ஒருவர் தன்னுடைய நிலத்தில் நடத்து செல்வதை கண்டான். மரியாதை நிமிர்த்தமாக கைகளை கூப்பி "Good Morning" என்று சொல்ல அந்த அதிகாரி எந்த விதமான செயலையும் விவசாயிடம் சொல்லவும் இல்லை செய்யவும் இல்லை. இப்படியாக தினமும் அதிகாரி அந்த வழியாக செல்ல விவசாயி தினமும் "Good Morning" என்று சொல்ல அந்த அதிகாரி நடந்து மட்டும் சென்று விடுவார். இப்படியாக பல வருடங்கள் சென்றது, இருந்தாலும் விவசாயி தன் செயலை விடவில்லை. அதிகாரி எதையும் கண்டுகொள்ளவில்லை. ஒரு நாள் இன கலவரம் உருவாகி கீழ் இன மக்களை கொன்று குவித்தனர். தண்டனை எப்படி என்றால் தலையை மேசை மீது வைக்க வேண்டும் அப்போது மேலிருந்து ஒரு கத்தி வந்து தலையை துண்டாக வெட்டிவிடும். இந்த தண்டனை நம் கதையில் வரும் அதிகாரி முன்னிலையில் நடந்தது. இந்த விவசாயின் தண்டனை நிறைவேற்றும் போது அதிகாரியை பார்க்க நேர்ந்தது அப்போது மீண்டும் "Good Morning" என்று சொன்னார். அந்த உயர் அதிகாரி விவசாயியைத் தன் பக்கம் அழைத்து கொண்டார். அந்த விவசாயி மரணம் அடையாமல் பாதுகாக்கப்பட்டார்.
இது போல் நாம் அனைவரும் மற்றவர் எப்படியோ நாம் நம் அன்பை மற்றவர்களிடம் காட்டினால் பல இடங்களில் (வீடு, அலுவலகம்) நிறைய துன்பங்களிருந்து விடுபட்டு இன்பமாக வாழ ஒரு வழி.
நான் கல்லூரியில் படித்து கொண்டிருக்கும் போது அந்த கல்லூரி நிர்வாகத்தின் கீழ் உள்ள தொழிற்சாலை தொழிலாளர்களும் நிர்வாகத்தினரும் கண்டு பேசும் தினமாக (பொங்கல் தினத்தன்று) விழா கொண்டாப்பட்டது. அப்போது அங்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு இருந்த அந்த நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும் கல்லூரியின் முதல்வர் கண்டு பேசும் தினத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாகச் சொன்ன இந்தக் கதை என்னை மிகவும் சிந்திக்க வைத்தது.
இந்த கதையைச் சொன்னவர், எந்த வேலை ஆனாலும் அதை எப்படி முறையாகச் செய்வது என்று எனக்கு சொல்லி கொடுத்த ஆசான் எங்கள் கல்லூரி முதல்வர்...
அரசன் கணேசன் தொழில் நுட்பக் கல்லூரி, சிவகாசி.
1 comment:
very useful real informations for all time (ever green).
Post a Comment