குற்றாலத்தில், ஒரு வயதான தம்பதியர் ஷாப்பிங் பண்ணிக் கொண்டிருந்தனர். அப்போது அந்தப் பெண்மணி, குழந்தை அதைக் கேட்டது, இதைக் கேட்டது என்று கூறி, நிறைய விளையாட்டுப் பொருட்களை வாங்கச் சொல்லி, நச்சரித்துக் கொண்டே இருந்தார். கணவர் அதைப் பொருட்படுத் தாமல், ஒரு சிலவற்றை மட்டுமே வாங்கினார். "என்னவோ நம்ம கிட்டப் பணமே இல்லாதது மாதிரி பிசுநாறித் தனம் பண்றீங்களே... குழந்தை ஆசைப் பட் டதை எல்லாம் வாங்கித் தரலாம் இல்ல? அதை ஏன் ஏமாற்றம் அடையச் செய்றீங்க?' என்று கேட்டு, கணவனைக் கோபித்தார். அவரோ அதைச் சட்டையே பண்ணாமல், கிளம்பி விட்டார். பெண்மணி சண்டை போடவே துவங்கி விட்டார். கணவரோ, சிரித்துக் கொண்டே, "வயசான அனுபவம் கொஞ்சம் கூட உனக்கு இல்லையே... இந்தச் சின்ன வயசிலேயே, அதோட மனசுல கேட்டதெல்லாம் கிடைக்கும்; நினைச்ச தெல்லாம் நடக்கும்கிற எண்ணத்தை வளர விடக்கூடாது. ஏமாற்றமும் கிடைக்கும்; சகிச்சுக் கிட்டுதான் ஆகணும்கிற மனப்பான்மையை உருவாக்கணும். அப்பதான் எதிர்காலத்திலே ஏமாற்றங்கள் ஏற்படுறப்ப அதுகளாலே சகிச்சுக் கவும், சமாளிக்கவும் முடியும். அதுக்காகத்தான் இப்பவே பயிற்சி தர்றேன்...' என்றார். புரிந்து கொண்ட பெண்மணி தலையை ஆட்டி னார். தேவையான பாடமல்லவா இது!
ரூபாய்1000பரிசுபெற்ற- இது உங்கள் பக்கம் - என்ற பகுதியில் — ஆ.கல்யாணி, தோவாளை,
பத்தாம் வகுப்பு மாணவன் ரூபாய்.650க்கு சக மாணவனை கொன்றுள்ளான்.பணம் கொடுத்த மாணவன் திருப்பி கேட்கும்பொழுது பள்ளி முதல்வர் மற்றும் தாய், தந்தையோரிடம் சொல்லிவிடுவேன் என்று கூறியதால் பதற்றத்தில் பீங்கானால் அடித்து கொன்றதாக தன்னோட வாக்குமூலத்தில் போலீஸாரிடம் தெரிவித்துள்ளான்.
மற்றொரு சம்பவம்:- ஒரு வங்கியின் கிளை மேலாளர் தற்கொலை. கடன் தொல்லையில் கடன் கொடுத்தவர்கள் மற்றவர்களிடம் சொல்லி மானத்தை வாங்குவேன் என்று சொன்னதால் பதற்றத்தில் தற்கொலை செய்ததாக கடிதத்தில் எழுதிவைத்து இறந்து உள்ளார்.
மேலே கூறப்பட்டுள்ள இரண்டு சம்பவத்திற்கும் ஒரே காரணத்தை சொல்லலாம்.இந்த காரணத்தை ஆராயும் முன் சின்ன சிந்தனை.
ஒவ்வொரு மனிதனும் தன் எண்ண ஓட்டத்திற்கு வாழாமல் மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்று நினைத்து தான் நினைத்தபடி வாழாமல் மற்றவர்கள்(சமூகம்) நினைத்தபடி வாழ்ந்து வாழ்க்கையின் பல இன்பங்களை தொலைத்துவிடுகின்றனர்.எடுத்துக்காட்டாக ஒரு மஞ்சள் நிற சட்டை என் விருப்பத்திற்கு நான் வாங்கி போட்டுக்கொண்டு அந்த சட்டை நன்றாக இருக்கிறது மற்றவர் அங்கீகரிக்க எதிர்பார்க்கிறோம்(மச்சி இந்த சட்டையில அஜித் மாதிரி அசத்துற..விஜய் மாதிரி கலக்குற..).இவ்வாறாக மற்றவர் போல்(அஜித்,விஜய்) நீங்கள் இருக்கிறீர்கள் என்று அந்த சட்டைக்கு மற்றவர்களுடைய(சமூகம்) அங்கீகாரம் தேவைப்படுகிறது.யாரவது ஒருவர் இந்த சட்டை நன்றாக இல்லை என்று சொன்னால் அந்த சட்டை மறுபடியும் விரும்பி போடமாட்டோம்.இவ்வாறாக வாழ்க்கையின் ஒவ்வொரு விஷயங்களிலும் இந்த சமூகத்தின் அங்கீகாரம் ஏதோ ஒரு ரூபத்தில் நமக்கு தேவைப்படுகிறது.
இவ்வாறாக தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்ற சுயசிந்தனை இல்லாமல், இந்த பிரச்சினை எப்படி கையாள்வது என்ற நோக்கம் இல்லாமல், ஒரு சில நொடிகளில் பதற்றத்தில் எடுக்கப்படுகின்ற இந்தஒருமுடிவுதான்மாணவனைகொலைசெய்தல், பலவங்கிஊழியர்களைகையாளுகின்றநல்லகல்வித்திறன்கொண்ட, மனபக்குவம்கொண்டஒருவங்கிமேலாளர்பதற்றத்தில்சிலநொடிகளில்எடுத்தஇந்ததற்கொலைமுடிவுஎன்றால்...சிறுகுழந்தைகளையோ/மாணவ-மாணவியர்கள், படிக்காதபாமரமக்களையோ,ஏன்இவ்வாறுதவறுசெய்தார்கள்என்றுநாம்எப்படிகுறைசொல்லமுடியும்.
இதை சரி செய்ய என்ன செய்யலாம்....
சில ஆண்டுகளுக்கு முன்னால் நம் வீட்டு பெரியவர்கள் பொய் சொல்லக்கூடாது,திருடக்கூடாது,மற்ற உயிரினங்களை துன்பப்படுத்தக்கூடாது,வயதில் மூத்தவர்களை மதிக்கவேண்டும், என்று நீதிக்கதைகளையும்,புராணங்களையும், சொல்லி குழந்தைகளை வளர்த்தனர்.குழந்தைகளின் ஆழ்மனமானது பசுமரத்தாணி போல பதிந்துவிடும்.இவ்வாறாக பதியும்பொழுது எதிர்காலத்தில் சின்னதவறு கூட செய்யநினைக்காது மனம்.ஆகையால்தான் நம் முன்னோர்கள் நல்ல விஷயங்களை பார்ப்பது, நல்ல விஷயங்களை செய்வது என்று நல்ல எண்ணங்களை குழந்தைகளின் மனதில் தூவிவிட்டனர். ஆகையால் அனேகமான பிரச்சனைகள் அந்தகாலங்களில் கிடையாது.ஆனால் இப்பொழுது குழந்தைகளின் மாலைப்பொழுது புத்தகத்தை மனப்பாடம் செய்யவே செலவிடப்படுகிறது.விளையாட்டு நேரங்களில் கூட தொலைக்காட்சி,(jetix-power rangers) கம்யூட்டர் கேம்ஸ்,போன்றவையே குழந்தைகளின் மனதில் ஆக்கிரமித்துள்ளன.பிறகு எப்படி அவர்களுடைய மனம் நல்ல சிந்தனைகளை தூண்டும்....ஏனென்றால் இன்று அனேக வீடுகளில் குழந்தைகளுக்கு கதை சொல்ல தாத்தா பாட்டி இல்லை.அப்படியே இருந்தாலும் அவர்களுக்கு மரியாதை இல்லை.சீர்படுத்த வேண்டிய தாய்,தந்தையர் இயந்திரத்தனமான உலகத்தில் பணம் சம்பாதிக்க பணத்தைதேடி அலைகின்றனர்.குழந்தைகள் எப்பொழுதும் பாசத்திற்கும்,அன்பிற்கும்,சொந்தங்களுக்கும் ஏங்குகின்றன.அதற்கான சந்தர்ப்பங்களை பெற்றோர்கள் கொடுக்க வேண்டும்.
இவ்வாறாக மனித வாழ்க்கை ஒரு சங்கிலி தொடர்போல அமைந்துள்ளது.ஆகையால் வாழ்க்கையில் ஏதோ ஒரு தருணத்தில் ஏற்படும் ஒரு இழப்பு(தாத்தா,பாட்டி இல்லாமல் தனிக்குடித்தனமாக வாழ்வது) அவனுடைய வாழ்க்கை முழுவதும் பிரதிபலிக்கின்றது.
இந்த விஷயத்தை பற்றி காலையில் ஸ்வாமிஓம்கார்அவர்களிடம்கருத்துபரிமாற்றம்செய்யும்பொழுதுஅவர்கள்என்னிடம்பகிர்ந்துகொண்டஒருவிஷயம்குழந்தைகளுக்குஎந்தஒருவிஷயத்தையும்நாம்சொல்லிக்கொடுக்கதேவையில்லை. ஒவ்வொருபெற்றோரும்தர்மத்தின்படிஒழுக்கநெறியுடன்வாழ்ந்தால்குழந்தைகளும்அவ்வாறேவாழ்வார்கள். இதைகருத்தில்கொண்டுஒவ்வொருபெற்றோரும்தனிநபர்ஒழுக்கத்தோடுவாழும்போதுவெற்றிநிச்சயம்..
இது எவ்வாறு சாத்தியம் என்றால் இன்று எவ்வளவோ புத்தகம் வந்து இருந்தாலும் திருக்குறளுக்கு நிகராக எந்த ஒரு புத்தகமும் உயிர்வாழ்வதில்லை. காரணம் திருவள்ளுவர் ஒரு குறளை எழுதுவதற்குமுன் அந்த குறளின்படி வாழ்ந்தார்,எழுதினார் இன்னும் அந்த புத்தகம் உயிரோடு இருக்கிறது.ஆகையால் குழந்தைகளுக்கு ஒரு எடுத்துக்காட்டாக வாழ்ந்தால் நம் குழந்தைகளும் அவ்வாறே வாழ்வார்கள்..ஆனால் நம் பெற்றோர்கள் குழந்தைகளை பொய் சொல்லாதே என்று அடித்து கண்டித்து வளர்க்க முற்பட்டாலும் நாம்(பெற்றோர்கள்) பொய் சொன்னால் நம் குழந்தையும் பொய் சொல்லும் என்பது மாற்ற முடியாத உண்மை.
கல்வி என்பது எப்படி இருக்கவேண்டும்? ஒரு குழந்தையின் உடல் வளர்ச்சி மன வளர்ச்சிக்கு ஏற்ப பாடத்திட்டகள் இருக்கவேண்டும். சில ஆண்டுகளுக்கு முன்னால் அப்படித்தான் இருந்தது, ஆனால் இப்பொழுது 1997 இல் நான் 10 ஆம் வகுப்பில் படித்த பாடங்களை இப்போது 3 வகுப்பு தனியார் பள்ளி மாணவன் மனப்பாடம் செய்துகொண்டு இருகின்றான். கல்வி என்பது புதியதாக எல்லா விஷியங்களையும் கற்க ஆர்வத்தை தூண்டும் வகையில் இருக்க வேண்டும், மிகவும் முக்கியம் குழந்தைகள் பள்ளிக்கு விருப்பத்துடனும் ஆசையுடனும் வரும் வகையில் பள்ளி ஆசிரியர்களும் பள்ளியும் செயல் படவேண்டும். வெறும் மதிப்பெண் வாங்க மட்டுமே பள்ளி என்று மாணவன் நினைத்து விடக்கூடாது. தற்போதைய நம் இந்திய கல்வி முறை அப்படி இல்லை, பழைய நம் பாரத குருகுல கல்வி சிறந்தது. ஆனால் தற்போது இது நடைமுறையில் இல்லை. உலகின் பல்வேறு நாடுகளில் நடை முறையில் உள்ள Dr. Montessoriஅவர்களால்கண்டுபிடிக்கப்பட்டமாண்டிசோரிமுறையைபயன்படுத்தலாம். இந்தமுறைகுழந்தைகளின்உடல்வளர்ச்சிமனவளர்ச்சிக்குஏற்பபாடத்திட்டங்களைகொண்டது. மேலும்இதன்சிறப்புஅம்சம்என்னவென்றல்தன்னம்பிகைமற்றும்நம்வேலைகளைநாம் தான்செய்யவேண்டும்என்றமனபக்குவத்தைசிறுவயதில்உருவாக்குவது. தமிழ்நாட்டில்நிறையமாண்டிசோரி பள்ளிகள்உள்ளன.
சரி என் கருத்துக்கு வருகின்றேன் .... சில நாட்களுக்கு முன்னால் ஒரு செய்தி படித்தேன், என்னவென்றல் இந்தியாவில் சென்ற ஆண்டு மட்டும் 1 லட்சம் குழந்தைகள் பள்ளிபடிப்பிற்கு பயந்து வீட்டைவிட்டு ஓடியவர்கள் .....இது அரசாங்க பதிவின் படி ......நிஜத்தில் அதிகம் என்கிறது ஒரு கருத்துக்கணிப்பு. தமிழ்நாடில் நடத்த ஒரு சம்பவம்
ஒரே வீட்டில் இருக்கும்எல்லாகுழந்தைகளிடமும்ஒரேஅன்பைசெலுத்தவேண்டும்என்பதுகுழந்தைமனநலமருத்துவர்களின்வாதம்ஆனால்அப்படிநடப்பதில்லைஎல்லாபெற்றோரும் அவர்களுக்குஇந்தபதிவு....... எல்லாபெற்றோரும்பார்க்கவேண்டியசெய்தி......
குழந்தை பிறந்தப் பிறகு அதன் உடல் ஆரோக்கியம் மிகவும் முக்கியம் ஏனென்றல் உடல் நன்றாக இருந்தல்தான் உயிர் தேகம் நன்றாக இயங்கும் உடலும் உயிரும் நன்றாக இருந்தல்தான் மனம் நன்றாக இயங்கும் ஆகவே இந்த பகுதியில் உடல் மற்றும் உயிர் ஆரோக்கியம் பற்றி பார்க்கலாமா....
உடல் நம் முன்னோர்களின் வாக்குபடி "உடல் வளர்தேன்னே உயிர் வளர்தேன்னே" என்ற திருமூலர் வாக்கு உண்மை. நம் உடலில் கடிகாரம் போல் காலை 03.00 மணி முதல் இரவு 02.59 வரை இரண்டு மணிநேரத்துக்கு ஒரு உடல் உறுப்பு இயங்குவதாக இந்தியா (சித்தா,ஆயுர்வேதம்) மற்றும் சீன மருத்துவ முறைகள் கூறுகின்றன ...... அதை இங்கு பார்ப்போம் .....
காலை 03.00 மணி முதல் 05.00 வரை: நுரையீரல் புவி ஈர்ப்பு விசை மிகவும் குறைவு (மனம் மிகவும் அமைதியாக இருக்கும்) ஆகையால் தியானம், இறை வழிபாடு, குழந்தைகள் படிப்புக்கு ஏற்ற நேரம். குறிப்பு : இந்தநேரத்தில்ஆஸ்துமாஉள்ளவர்கள்துங்கமுடியாது. இவர்கள்சரியாக 03.00 மணிக்குஎழுந்து 05.00 மணிவரைஇரும்மல்தொல்லியல்அவதியுறுவர்.
அதி காலை 05.00 மணி முதல் 07.00 வரை: பெருங்குடல் இந்த நேரத்தில் காலை கடன்களான மலம் கழித்தல், பல் துலக்குதல், குளித்தல் ஆகியவற்றை செய்யவேண்டும். குறிப்பு : மலம்முட்டும்மாவதுசெய்துஇருக்கவேண்டும். ஏன்என்றால்இன்றுமருத்துவமனைகளில்இறப்பவர்களின் 50 சதவிதத்தினர்இறக்கும்தருவாயில்மலம், ஜலம்சரியாகபிரியாமல்இறக்கின்றனர். ஆகவேசிறுவயதுமுதல்பெரியவர்கள்வரைகாலை 05.00 மணிமுதல் 07.00 வரைக்குள்மலம், ஜலம்கழிக்கவேண்டும் . காலை 07.00 மணி முதல் 09.00 வரை :இரைப்பை இந்த நேரத்தில் காலை உணவை முடித்து இருக்க வேண்டும்.
காலை 09.00 மணி முதல் 11.00 வரை: மண்ணீரல் நாம் சாப்பிட்ட உணவை மற்ற உறுப்புகளுக்கு பிரித்து கொடுக்கும் நேரம். இந்த வேலை நடந்தால் தான் சுறுசுறுப்பாக இருக்க முடியும். தடைப்பட்டால் அன்று முழுவது சோம்பலாக இருப்பதை உணரலாம். ஆகையால் ...... குறிப்பு : இந்தநேரத்தில்அமுதம் (சாகாவரம்கொடுக்கும்உணவு) கொடுத்தாலும்உண்ணகூடாதுஎன்றனர்நம்முன்னோர்கள். ஆகையால்இந்தநேரத்தில்தண்ணீர்கூடகுடிக்கக்கூடாதென்றுசொன்னார்கள். பகல் 11.00 மணி முதல் 01.00 வரை: இதயம் இந்த நேரத்தில் தூங்க கூடாது. குறிப்பு : இந்தநேரத்தில்தூங்கினால்இதயசம்பந்தப்பிரச்சனைகள்வரும்.
மதியம் 01.00 மணி முதல் 03.00 வரை: சிறுகுடல் இந்த நேரத்தில் மதிய உணவை முடித்திருக்க வேண்டும்.
மாலை 03.00 மணி முதல் 05.00 வரை: சிறுநீரகப்பை இந்த நேரத்தில் தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். ஜலம் கழிக்கவேண்டும். குறிப்பு : தினமும்ஏதாவதுபழரசம்குடிக்கநினைத்தால்இந்தநேரத்தில்அதைகுடிக்கவேண்டும். அதன்பலன் 100% உடம்பில்சேரும்.
மாலை 05.00 மணி முதல் 07.00 வரை: சிறுநீரகம் குழந்தைகளை விளையாடவும் அல்லது நடைப் பயிற்சி செய்யவும் சிறந்த நேரம். நம் வேர்வை வெளியேற வேண்டும் .
இரவு 07.00 மணி முதல் 09.00 வரை: இருதயஉறை இரவு உணவு சாப்பிடலாம், தியானம் செய்யலாம். குறிப்பு : இந்தநேரத்தில்பாலோ, பால்சார்ந்தஉணவுகளும்சாப்பிடகூடாது.
இரவு 09.00 மணி முதல் 11.00 வரை: நாளமில்லாசுரப்பிகள் ஆறுதல் தேடும் நேரம், அறிவுரைகளை ஏற்கும் நேரம் ஆகையால் குழந்தைகளுக்கு அறிவுரை கூற நினைத்தால் இந்த நேரத்தில் கூறினால் குழந்தைகள் (பெரியவர்களும்) கேட்பார்கள்.
இரவு 11.00 மணி முதல் 01.00 வரை: பித்தப்பை இந்த நேரத்தில் அழ்ந்தத் தூக்கம் தேவை. குறிப்பு : தூங்கவில்லைஎன்றால்அழகு, அறிவு, பலம்குறையும்.
இரவு 01.00 மணி முதல் 01.00 வரை: கல்லீரல் இந்த நேரத்தில் அழ்ந்தத் தூக்கம் தேவை.
இவ்வாராக இந்த காலச் சக்கரத்தில் தன் உடம்பினை பாதுகாத்தால் எந்த ஒரு பாதிப்பும் இல்லாம்மல் சுகமாக வாழ முடியும்.
உயிர்
குழந்தை பிறக்கும் போதே அவர்கள் சாப்பிடும் உணவில் இருந்து வரும் ரசம் ஆண்களுக்கு விந்துவாகவும் , பெண்களுக்கு நாதமாகவும் பிரித்து ஒரு குறிப்பிட்ட வயது வரைக்கும் (13 வயதிற்குள்) சதை, எலும்பு, மூளை ஆகியவை வளர்ச்சிக்கு தேவையான அளவு எடுத்து கொள்கின்றது. 13 வயதிற்கு மேல் தேவைக்கு அதிகமாக இருக்கும் சமயத்தில் அவைகள் வெளியேறுகின்றது. இதுவே பெண்களின் "பூப்பெய்த்தல்" சம்பவம் ஆகும். இந்த தருணத்தில் காயகல்ப பயிற்சி செய்ய வேண்டும். இந்தப் பயிற்சி அனைத்து பள்ளி கல்லூரிகளில் இலவசமாக நடத்துகின்றனர். தமிழகம் முழுவதும் இவர்களுக்கு கிளைகள் இருக்கின்றன அங்கு நாம் கட்டணம் செலுத்தி வகுப்புகளில் கலந்து கொள்ளலாம்.
நடத்துபவர்கள்: Shri Vethathiri Maharishi World Community Service Centre (WCSC), No.26, Second Seaward Street, Valmiki Nagar, Thiruvanmiyur, Chennai - 600 041.
கர்ப்பகாலத்தில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் ஏனென்றால் கர்ப்பகாலத்தில் மனகசப்போ அல்லது நோய்வாய்ப்பட்டாலோ அது குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.எடுத்துக்காட்டாக மூன்றாவது மாதத்தில் குழந்தையின் கண் உருவாகும் என்று வைத்துக்கொள்வோம்,இந்த காலத்தில் நோய் ஏற்பட்டால் அது குழந்தைக்கு கண் சம்பந்தப்பட்ட பாதிப்புகளையோ அல்லது நோய்களையோ ஏற்படுத்த்தும்.ஆகவே நல்ல விஷயங்களை கேட்டுக்கொண்டு நல்ல கதைகளை கேட்டுக்கொண்டு இன்பமாக வாழ முயற்சி செய்யுங்கள்.இது முக்கியம்.