Monday, December 15, 2008

தாய் தந்தையினரின் பெருமை


இன்றையப் பர பரப்பான உலகத்தில் குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் இடையே உள்ள உறவு மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. ஒரு காலத்தில் பெற்றோரை கவனிக்க முடியாமல் முதியோர் நிலையத்தில் சேர்த்தவர்கள் இப்போது அதுவும் முடியாமல் எங்காவது தொலைத்து விடுகின்றனர். நான் கடந்த வியாழக்கிழமை கார்த்திகை தீபத்தன்று திருவண்ணாமலை கிரி வலத்தில் குபேர லிங்கம் கோவிலுக்குள் செல்லும் போது ஒரு அதிர்ச்சியான விளம்பர பலகையை பார்த்தேன். அதில் முதியோரை கவனிக்க நிதி வழங்ககோரி இருந்தார்கள். அந்தப் பலகையில் குழந்தைகளால் தொலைக்கபட்டப் பல முதியோரைப் புகைப்படம் பிடித்து போட்டு இருந்தனர். தன்னை ஈன்று எடுத்த பெற்றோரை பாதுகாக்காதவனை எந்த கடவுளாலும் பாதுகாக்க முடியாது.



இதற்கு ஒரு கதை: இந்தக் கதை மகாபாரதத்தில் உள்ள ஒரு கிளைக் கதை

இந்தியாவின் வடக்கே ஒரு ஊரில் ஒருவனுடைய தாய் தந்தை ஆகிய இருவருக்கும் கண்கள் தெரியாது. அவனுடைய பெயர் ராமன். ராமன் சிறு வயதில் இருந்து தன் பெற்றோர்க்கு தேவையான (உணவு,உடை) போன்ற அனைத்தையும் பூர்த்தி செய்த்து அவர்களது மனம் நோகாமல் நடத்து வந்தான். அது மட்டும் அல்லாமல் அவன் வசித்து வந்த வீடு புண்ணிய நதியான கங்கைக்கு அருகில் உள்ளது. நாள் தோறும் கங்கையில் நீராடப் பல ஞானிகள், ரிஷிகள் நடத்து யாத்திரை செல்வதுண்டு. இவன் யாத்திரை வருபவர்களுக்கு தங்க இடமும் உண்ண உணவும் கொடுத்து வந்தான்.

ஒரு நாள் யாத்திரையாக வந்த மூன்று ரிஷிகள் ராமன் வீட்டில் தங்கி ஓய்வு எடுத்து வந்தனர். அவர்களுக்கு உணவு தயார் செய்து சாப்பிட அழைத்தான். சாப்பிட வந்தவர்கள் ராமா நீ பலத் தடவை கங்கையில் நீராடி இருக்கிறாயா என்று கேட்டனர். அதற்கு ராமன் நான் எனது பெற்றோர்களுக்கு தேவையானப் பல வேலைகளை முடிக்கவே நேரம் சரியாக இருக்கிறது ஆகையால் நான் இது வரைக்கும் கங்கையைப் பார்த்தது கூட இல்லை என்றான். மிகவும் கோபம் கொண்ட ரிஷிகள் உலகத்தின் பலப் பகுதிகளில் இருந்து கங்கையைப் பார்க்க வருகின்றனர் நீ கங்கை அருகில் இருத்தும் செல்லவில்லை என்றால் நீ எவ்வளவு பாவம் செய்தவனாக இருக்க வேண்டும் உன் வீட்டில் சாப்பிடுவது பாவம் என்று ராமன் வீட்டில் சாப்பிடாமல் யாத்திரை சென்றுவிட்டனர். ராமனுக்கு மிகவும் வருத்தம். கங்கையின் பாதையைத் தேடிப்போன ரிஷிகள் சென்று கொண்டே இருந்தனர் கங்கையை காணவில்லை. மிகவும் வருத்தத்துடன் வந்து கொண்டிருத்த ரிஷிகள் கங்கை ராமன் வீட்டின் வெளியேப் பாய்வதை கண்டனர். என்ன அதிசயம் என்று பார்க்க ஒரு சப்தம் மட்டும் கேட்டது எவன் ஒருவன் தாய் தந்தையருக்கு தேவையானவற்றை கொடுத்து மனம் நோகாமல் வைத்திருக்கனோ அவன் தினம் தினம் கங்கையில் குளித்தற்கு சமம். ஆக தினம் தினம் பாவத்தை கழுவி புனியத்தை அடைந்தவன். ஆகையால் இந்த உலகத்தில் தாய் தந்தையருக்கு நிகரான கடவுள் உலகில் இல்லை. தாய் தந்தையாரை கவனிக்காமல் எந்த கோவிலுக்கு சென்று பரிகாரம் செய்தாலும் என்ன தானம் செய்தாலும் புண்ணியம் கிடைக்காது.

சிவகாசி மாரியம்மன் கோவிலில் வைத்து நடந்த சொற்பொழிவில் நான் கேட்ட இந்தக் கதை என்னை மிகவும் சிந்திக்க வைத்தது.

சொற்பொழிவாளர்:
திருமதி. இளம்பிறை மணிமாறன், சமய சொற்பொழிவாளர்.
தூத்துகுடிஇல் உள்ள ஒரு பெண்கள் கலைக் கல்லூரிஇன் முதல்வர்,




5 comments:

Anonymous said...

very seberb story

Anonymous said...

superb story

Anonymous said...

நல்ல கருத்து ராம்.

Subitha Arunkumar said...

very good story.

Jaleela Kamal said...

ரொம்ப அருமையான பகிர்வு

LinkWithin

Related Posts with Thumbnails