குற்றாலத்தில், ஒரு வயதான தம்பதியர் ஷாப்பிங் பண்ணிக் கொண்டிருந்தனர். அப்போது அந்தப் பெண்மணி, குழந்தை அதைக் கேட்டது, இதைக் கேட்டது என்று கூறி, நிறைய விளையாட்டுப் பொருட்களை வாங்கச் சொல்லி, நச்சரித்துக் கொண்டே இருந்தார். கணவர் அதைப் பொருட்படுத் தாமல், ஒரு சிலவற்றை மட்டுமே வாங்கினார். "என்னவோ நம்ம கிட்டப் பணமே இல்லாதது மாதிரி பிசுநாறித் தனம் பண்றீங்களே... குழந்தை ஆசைப் பட் டதை எல்லாம் வாங்கித் தரலாம் இல்ல? அதை ஏன் ஏமாற்றம் அடையச் செய்றீங்க?' என்று கேட்டு, கணவனைக் கோபித்தார். அவரோ அதைச் சட்டையே பண்ணாமல், கிளம்பி விட்டார். பெண்மணி சண்டை போடவே துவங்கி விட்டார். கணவரோ, சிரித்துக் கொண்டே, "வயசான அனுபவம் கொஞ்சம் கூட உனக்கு இல்லையே... இந்தச் சின்ன வயசிலேயே, அதோட மனசுல கேட்டதெல்லாம் கிடைக்கும்; நினைச்ச தெல்லாம் நடக்கும்கிற எண்ணத்தை வளர விடக்கூடாது. ஏமாற்றமும் கிடைக்கும்; சகிச்சுக் கிட்டுதான் ஆகணும்கிற மனப்பான்மையை உருவாக்கணும். அப்பதான் எதிர்காலத்திலே ஏமாற்றங்கள் ஏற்படுறப்ப அதுகளாலே சகிச்சுக் கவும், சமாளிக்கவும் முடியும். அதுக்காகத்தான் இப்பவே பயிற்சி தர்றேன்...' என்றார். புரிந்து கொண்ட பெண்மணி தலையை ஆட்டி னார். தேவையான பாடமல்லவா இது!
— ஆ.கல்யாணி, தோவாளை,
நன்றி: தினமலர்